கன்னி ஆனி மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள கன்னி ராசிக்காரர்களே, இந்த ஆனி மாதம் எதிர்பாராத வகையில் வருமானம் வருகின்ற மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் புதன் பகவான் ஆட்சியில் இருப்பதால் நல்லவை நடைபெறும். பணவரவு தாராளமாக வரக்கூடும். உங்கள் ராசிநாதன் புதன் பெரும்பாலும் தனது நண்பரான சூரியனோடு இணைந்து இருப்பதால் கவலைகள் இல்லாத மாதமாக இருக்கப் போகின்றது. இதுவரை இல்லத்தில் தேவையில்லாத சண்டை, சச்சரவு மற்றும் மனக்குழப்பங்கள் இருந்து வந்ததே, இனி அந்த நிலை மாறும். இதுவரை இழுபறியாக
 
Kanni aani rasi palan 2018

அன்புள்ள கன்னி ராசிக்காரர்களே, இந்த ஆனி மாதம் எதிர்பாராத வகையில் வருமானம் வருகின்ற மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் புதன் பகவான் ஆட்சியில் இருப்பதால் நல்லவை நடைபெறும். பணவரவு தாராளமாக வரக்கூடும். உங்கள் ராசிநாதன் புதன் பெரும்பாலும் தனது நண்பரான சூரியனோடு இணைந்து இருப்பதால் கவலைகள் இல்லாத மாதமாக இருக்கப் போகின்றது. இதுவரை இல்லத்தில் தேவையில்லாத சண்டை, சச்சரவு மற்றும் மனக்குழப்பங்கள் இருந்து வந்ததே, இனி அந்த நிலை மாறும்.

இதுவரை இழுபறியாக இருந்த காரியங்கள் தடை விலகி நன்றாக நடைபெறக்கூடும். செய்யும் தொழிலில், வியாபாரத்தில் சிக்கல்கள் இருந்து வந்தால் அதற்கு ஒரு தீர்வு வரக்கூடும். குறிப்பாக அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு திருப்புனை மாதமாக இருக்கப் போகின்றது. கடனை அடைப்பதற்கு போதிய பணவரவு வரக்கூடும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்தி பெரும் லாபத்தை ஈட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் அவ்வப்போது மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும்.

ஜீவன ஸ்தானம் வலுப்பெறுவதால் உங்கள் தகுதிக்கேற்ற நல்ல வேலை வாய்ப்பு வரக்கூடும். வேலை சுமை குறையும். தொழிலில் பலத்த போட்டியை சந்தித்தவர்களுக்கு இனிமேல் போட்டியாளர் விலகுவதை காண்பார்கள். இந்த ஆனி மாதத்தில் வீண் விரையங்கள் ஏற்படாமல் கையில் பணவரவு அதிகரிக்கும். மந்தமாக இருந்து வந்த வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கும்.

From around the web