கை ரேகையில் உள்ள ஆரோக்கிய ரேகை என்ன கூறுகிறது?...

இவ்வாறு ஆரோக்கியத்தைப் பற்றி கூறும் ஒருவரது கை ரேகையில் உள்ள ஆரோக்கிய ரேகை என்ன சொல்கிறது என்று பார்ப்போமா....

 

ஆரோக்கியம் நாம் வாழ்வதற்கே அர்த்தமான ஒன்று. என்னதான் பணம், செல்வாக்கு நம்மிடம் அதிகம் இருந்தாலும் இவற்றை அனுபவிக்க நாம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே முடியும்.

குடிசையில் வாழ்ந்தாலும் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று ஒரு சிலர் விரக்தியாக கூறுவதை நாம் கேட்டு இருப்போம். பணம் இல்லாதவரிடம் பணம் இல்லையே என்ற கவலையும், நாம் எப்போது முன்னுக்கு வருவோம் என்ற எண்ணமும் இருக்கும்.

ஆனால் பணம் அதிகம் இருப்பவரிடம் கேட்டுப் பாருங்கள் பணம் இருந்து என்ன பயன்... மனதில் மகிழ்ச்சியும், உடல் நலமாகவும் இல்லையே என்று தான் சொல்வார்கள். ஒருவருக்கு உடல் ஆரோக்கியம் தான் மிக மிக முக்கியமானது.

இவ்வாறு ஆரோக்கியத்தைப் பற்றி கூறும் ஒருவரது கை ரேகையில் உள்ள ஆரோக்கிய ரேகை என்ன சொல்கிறது என்று பார்ப்போமா....

இந்த ஆரோக்கிய ரேகைக்கு புதன் ரேகை என்ற மற்றோரு பெயரும் உண்டு. இது விதி ரேகையின் அருகில் செல்லும். நாம் இதற்கு முன் கூறிய விதி ரேகை, இதய ரேகை, புத்தி ரேகை இவையெல்லாம் சரியாக இல்லை என்றாலும் பரவாயில்லை.

இந்த ஆரோக்கிய ரேகை சரியாக அமைந்து விட்டால் போதும் மேற்கூறிய ரேகைகளால் ஏதாவது தவறுகள் நடைபெற விருந்தாலும் இந்த புதன் ரேகையால் அனைத்தும் விலகி விடும். இந்த ரேகையும் தெளிவாகவும், மெல்லியதாகவும் இருந்தால் மிகவும் நல்லது. இந்த ரேகை நன்றாக உள்ள ஒருவர் பேச்சு திறமையிலும், வியாபாரத் திறமையிலும் சிறந்து விளங்குவாராம்.

From around the web