கடகம் ராசி மே மாதம் ராசி பலன்கள் 2018!

கடகம் ராசிக்காரர்களே, இந்த மே மாதத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்பட போகின்றது. உங்களுக்கு அதிக அளவில் நன்மைகள் ஏற்பட போகின்றது. மே மூன்றாம் தேதிக்கு பிறகு புதன் பகவானும், செவ்வாய் பகவானும் நன்மைகளை வாரி வழங்குவர். சனி பகவான் ஆறாம் இடத்தில் தொடர்வதால் உங்கள் கை ஓங்கும். எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி கிட்டும். பேச்சில் அனுபவ அறிவு பளிச்சிடும். ஒரு சிலருக்கு வெளிநாடு, வெளிமாநிலம் சென்று வேலை செய்யும் நிலை உருவாகும். உங்கள் ராசியில் ராகு
 
Kadagam may month rasi palan 2018

கடகம் ராசிக்காரர்களே, இந்த மே மாதத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்பட போகின்றது. உங்களுக்கு அதிக அளவில் நன்மைகள் ஏற்பட போகின்றது. மே மூன்றாம் தேதிக்கு பிறகு புதன் பகவானும், செவ்வாய் பகவானும் நன்மைகளை வாரி வழங்குவர். சனி பகவான் ஆறாம் இடத்தில்  தொடர்வதால் உங்கள் கை ஓங்கும். எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி கிட்டும். பேச்சில் அனுபவ அறிவு பளிச்சிடும். ஒரு சிலருக்கு வெளிநாடு, வெளிமாநிலம் சென்று வேலை செய்யும் நிலை உருவாகும்.

உங்கள் ராசியில் ராகு பகவானும், ஏழாம் இடத்தில் கேது பகவானும் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையாரின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களை சமாளிக்க கடுமையாக உழைக்க வேண்டி வரக்கூடும். மூத்த அதிகாரிகள் உங்கள் திறனை பரிசோதிப்பார்கள்.

குரு பகவான் நான்காம் இடத்தில் இருப்பதால் வேலை சுமை அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். சொத்து பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். நீண்ட தூரம் பயணம் செய்யும் பொழுது கவனம் தேவை. இல்லத்தில் குதூகலம் உண்டாகும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். செவ்வாய் பகவான் சாதகமாக இருப்பதால் சகோதர வகையால் ஆதாயம் கிட்டும். கடுமையாக உழைத்தும் பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படுவீர்கள். மே மாதம் பிற்பகுதியில் ஏற்றமான சூழல் உண்டாகும்.

மொத்தத்தில் இந்த மே மாதம் கடகம் ராசியினருக்கு வளர்ச்சிக்கான மாதமாக இருக்கின்றது.

From around the web