கடகம் ராசி மார்ச் மாத பொது பலன்கள் 2018!

கடகம் ராசியினருக்கு இந்த மார்ச் மாதம் நல்ல பண வரவு இருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்கள் மனம், குணம் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே இப்பொழுது மாறப்போகிறது. இது வரை பல வித துன்பங்கள், துயரங்கள் சந்தித்துக் கொண்டு இருந்த கடகம் ராசியினருக்கு இனி சாதகமான பலன்கள் நடைபெறும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு படிப்படியாக வெற்றி கிட்டும். இந்த மார்ச் மாதம் ஏழாம் தேதி செவ்வாய் தனுசு ராசியில் ஆறாம் இடத்தில் உங்களுக்கு சஞ்சரிப்பதால் நல்ல முன்னேற்றங்கள்
 
கடகம்

கடகம் ராசியினருக்கு இந்த மார்ச் மாதம் நல்ல பண வரவு இருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்கள் மனம், குணம் எவ்வாறு இருந்ததோ  அவ்வாறே இப்பொழுது மாறப்போகிறது. இது வரை பல வித துன்பங்கள், துயரங்கள் சந்தித்துக் கொண்டு இருந்த கடகம் ராசியினருக்கு இனி சாதகமான  பலன்கள் நடைபெறும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு படிப்படியாக வெற்றி கிட்டும்.

இந்த மார்ச் மாதம் ஏழாம் தேதி செவ்வாய் தனுசு ராசியில் ஆறாம்  இடத்தில்  உங்களுக்கு சஞ்சரிப்பதால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படக்கூடும். இதுவரை நல்லவர்கள் யார், தீய நண்பர்கள் யார் என்று தெரியாமல் இருந்தவர்கள் இப்பொழுது கெட்டவர்களை அடையாளம் தெரிந்து விலகுவீர்கள்.

ஆறாம்  இடத்தில்  இருக்கும் சனி பகவான் உங்களுடைய கடன்கள், பகைவர்கள், நோய்கள்  யாவும் அழித்து  விடுவார். இதுவரை கடன்களை எப்படி அடைப்பது என்று இருந்தவர்கள் கூட இப்பொழுது சிறிது சிறிதாக அடைக்கும் அளவிற்கு பணவரவு வரக்கூடும். இதுவரை உற்றார் உறவினர்களிடமிருந்த பகை, கருத்து  வேறுபாடுகள் யாவும் விலகும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்ல வேண்டும். இரும்பு, கட்டிடம், மின்சாரத்துறை, உணவுத்துறை போன்றவற்றில் பணிபுரிபவர்களுக்கு, தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்றமான காலமாக அமையும்.  உத்தியோகஸ்தர்களுக்கு  பதவி, பட்டம், சம்பள உயர்வு கிடைக்கும். உங்களை பற்றி புறம் பேசி, பொறாமைப்பட்டு கொண்டு இருப்பவர்களை பெரிதுப்படுத்தாமல் அவர்களை தவிர்த்து விடுங்கள்.

ஒரு சிலருக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். புதிய வியாபாரம், புதிய வேலை, புதிய தொழிலும் வரப்போகிறது. தாமதமாக வந்தாலும் உங்களுக்கு பணவரவு தர போகிறது. மாணவர்கள் ஓய்வு  நேரங்களை வீணாக்காமல் தங்கள் எதிர்காலத்திற்கு பயனளிக்கும் விதமாக அமைத்து கொள்ள வேண்டும்.  பெற்றவர்கள், ஆசிரியர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு படிப்பில் முன்னேற்றம் அடைவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போய்  கொண்டு இருந்த குலதெய்வ  பிரார்த்தனைகளை நிறைவேற்றம் செய்யும் நேரம் வந்து இருக்கிறது.

From around the web