கடகம் ஜூலை மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள கடகம் ராசிக்காரர்களே, இந்த ஜூலை மாதம் மனை, வீடு வாங்கும் மாதமாக இருக்கப் போகின்றது. புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரக்கூடும். வீடு கட்ட வங்கி கடன் கிடைக்கும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நீங்கள்தான் எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஜூலை 5-ம் தேதி சிம்மத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 4,11 அதிபதியான சுக்கிரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது பணவரவு சீராக
 
Kadagam july month rasi palan 2018

அன்புள்ள கடகம் ராசிக்காரர்களே, இந்த ஜூலை மாதம் மனை, வீடு வாங்கும் மாதமாக இருக்கப் போகின்றது. புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரக்கூடும். வீடு கட்ட வங்கி கடன் கிடைக்கும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நீங்கள்தான் எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

ஜூலை 5-ம் தேதி சிம்மத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 4,11 அதிபதியான சுக்கிரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது பணவரவு சீராக வரக்கூடும். ஒரு சிலருக்கு புதிய வீடு கட்டுவது, கடை திறப்பது, வீட்டில் மங்கள நிகழ்வுகள் ஏற்படக்கூடும்.

ஆறாம் வீட்டில் சனி பகவான் வலுவாக இருப்பதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரக்கூடும். சூரியன் பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் விரயங்கள்  கூடுதலாக இருக்கக்கூடும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். குரு பகவான் நான்காம் இடத்தில் தொடர்வதால் தாயாரின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். ஜூலை 4-ம் தேதி குரு வக்ர நிவர்த்தி அடைவதால் ஆரோக்கியத்தில் தொல்லைகள் ஏற்படக்கூடும். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும்.

உங்கள் ராசியில் ராகுவும், ஏழாம் இடத்தில் கேதுவுடன் இணைந்து உச்சம் பெற்ற  செவ்வாய் இருப்பதால் சொந்தங்களாலும், சொத்துக்களாலும் பிரச்சனை ஏற்படக்கூடும். அதனை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. உடன் பிறந்தவர்களிடம் கருத்து  வேறுபாடு தோன்றி மறையக்கூடும்.

ஜூலை 9-ம் தேதி மகர ராசியில் செவ்வாய் வக்ரம் அடைவதால் எடுக்கின்ற புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.  ஒரு சிலருக்கு மடமடவென்று நடந்த காரியங்களில் தடைகள், தாமதமும் ஏற்படக்கூடும். மேலும், நல்லவை நடைபெற அங்காரகனை செவ்வாய் கிழமையில் வழிபட்டு வர தடைகள் அகலும்.

From around the web