கடகம் ஆனி மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள கடகம் ராசியினருக்கு இந்த ஆனி மாதம் அனுசரித்து செல்ல வேண்டிய மாதமாக இருக்கப் போகின்றது. சூரியன் பதினோராம் இடத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு போவதால் எவ்வித பாதிப்புகளும் உண்டாகாது. சூரியனை குரு பார்ப்பதால் எவ்வித கஷ்டங்களையும் கொடுக்காது. செவ்வாய் உச்சமாக ஏழாம் வீட்டில் இருப்பதால் கடக ராசியினருக்கு யோகமான அமைப்பு ஏற்படக்கூடும். இந்த ஆனி மாதம் ரிஸ்க் எடுத்து சாதித்து காட்டுவீர்கள். உச்சம் பெற்ற செவ்வாய் உங்கள் ராசியை பார்ப்பதால் எதிலும் துணிச்சலுடன் செயல் புரிவீர்கள்.
 
Kadagam aani rasi palan 2018

அன்புள்ள கடகம் ராசியினருக்கு இந்த ஆனி மாதம் அனுசரித்து செல்ல வேண்டிய மாதமாக இருக்கப் போகின்றது. சூரியன் பதினோராம் இடத்தில்  இருந்து விரைய ஸ்தானத்திற்கு போவதால் எவ்வித பாதிப்புகளும் உண்டாகாது. சூரியனை குரு பார்ப்பதால் எவ்வித கஷ்டங்களையும் கொடுக்காது. செவ்வாய் உச்சமாக ஏழாம் வீட்டில் இருப்பதால் கடக ராசியினருக்கு யோகமான அமைப்பு ஏற்படக்கூடும். இந்த ஆனி மாதம் ரிஸ்க் எடுத்து சாதித்து காட்டுவீர்கள். உச்சம் பெற்ற செவ்வாய் உங்கள் ராசியை பார்ப்பதால் எதிலும் துணிச்சலுடன் செயல் புரிவீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும்.

கடக ராசியினர் கொடுக்கும் வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் . இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்றவை நிரந்தரமாக இல்லாமல் இருந்தவர்களுக்கு இந்த ஆனி மாதம் அந்த நிலை மாறும். ஒரு சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம், வேலைமாற்றம் ஏற்படக்கூடும். தந்தை வழி  தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் ஏற்படக்கூடும். குறிப்பாக ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு தடைகள் விலகி சகல விதத்திலும் நன்மைகள் ஏற்படும் மாதமாக இருக்க போகின்றது.

இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படக்கூடும். கணவன் மனைவி உறவு மேம்படும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். ஒரு சிலருக்கு பிள்ளைகள் சம்மந்தமாக அலைச்சல் ஏற்படக்கூடும். அவர்களின் எதிர்காலம் கருதி அச்சம் ஏற்படக்கூடும். மொத்தத்தில் இந்த ஆனி மாதம் கடக ராசியினருக்கு மந்த நிலை மாறி அனைத்து விதத்திலும் நன்மைகள் ஏற்படக்கூடிய மாதமாக இருக்கப் போகின்றது.

From around the web