வானசாஸ்திர ஜோதிடம் பற்றி அறிவோமா.....

பல வகையான ஜோதிட முறைகள் உள்ளது என்று முன்கூட்டியே பார்த்தோம். அதில் வானசாஸ்திரம் ஜோதிட முறையில் தான் நாம் வாழும் இந்த பூமிக்கு ஜோதிடம் கூறலாம்.

 

நாம் வாழ்கின்ற இந்த பூமி எப்படி உருவானது என்று சில நேரங்களில் சிந்தித்து பார்த்தது உண்டா.... என்ன ஆச்சரியம் இதையெல்லாம் நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக உள்ளது. இயற்கையாகவே பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தானாகவே உருவானது தான் இந்த பூமி. அதன் பின் தான் ஒவ்வொரு உயிரினமாக இதில் தோன்றியது.

இப்படிப்பட்ட பல அதியங்கள் நிறைந்த பூமிக்கே நாம் ஜோதிடம் பார்த்து கூற முடியும். அதாவது பொதுவாக நாம் பிறக்கும் நேரத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்து மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவருக்கும் ஜாதகம் கணித்து கூறப்படுகிறது.

இது போன்றே தான் நமது புவிக்கும் ஜாதகம் கணித்து கூறப்படுகிறது. பல வகையான ஜோதிட முறைகள் உள்ளது என்று முன்கூட்டியே பார்த்தோம். அதில் வானசாஸ்திரம் ஜோதிட முறையில் தான் நாம் வாழும் இந்த பூமிக்கு ஜோதிடம் கூறலாம்.

அதாவது அது எப்படி என்றால் வான் வெளியில் நிகழக்கூடிய பல்வேறு மாற்றங்களால் பூமியில் தட்ப வெப்பநிலை, மழைப்பொழிவு, பருவகால மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் போன்றவற்றை அறியலாம்.

இதைவைத்து தான்  பிறக்கின்ற ஒவ்வொரு ஆண்டிற்கும் நமது ஜோதிட வல்லுநர்கள் ஜோதிடம் கணித்து கூறுகின்றனர்.

From around the web