தனுசு ராசி விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018!

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டு மகிழ்ச்சி தரும் வருடமாக இருக்கப் போகிறது. உங்கள் ஜென்ம ராசியில் சனி பகவான், இரண்டாம் இடத்தில் கேது பகவான், எட்டாம் இடத்தில் ராகு பகவான், பதினோராம் இடத்தில் குரு பகவான் என்ற கிரக அமைப்பு இருக்கிறது. மேலும் இந்த விளம்பி வருடத்தில் அடுத்தடுத்து குரு பெயர்ச்சி மற்றும் ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. தனுசு ராசியினர் இந்த வருடம் எதிலும் விழிப்புடன் இருக்க வேண்டும். சிலர் உங்களிடம் தேவையற்ற பேச்சு
 
Dhanusu vilambi Tamil puthandu rasi palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டு மகிழ்ச்சி தரும் வருடமாக இருக்கப் போகிறது. உங்கள் ஜென்ம ராசியில் சனி பகவான், இரண்டாம் இடத்தில் கேது பகவான், எட்டாம் இடத்தில் ராகு பகவான், பதினோராம் இடத்தில் குரு பகவான் என்ற கிரக அமைப்பு இருக்கிறது. மேலும் இந்த விளம்பி வருடத்தில் அடுத்தடுத்து குரு பெயர்ச்சி மற்றும் ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கிறது.

தனுசு ராசியினர் இந்த வருடம் எதிலும் விழிப்புடன் இருக்க வேண்டும். சிலர் உங்களிடம் தேவையற்ற பேச்சு கொடுத்து, பிறகு திசை திருப்பி, உங்களுக்கு வீண் பழி, அவப்பெயர் உண்டாகும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். தொலைதூரம் பயணம் செல்லும் பொழுது கவனமாக செல்லவும்.

அலுவலகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும். உங்கள் திறமைகளை உதாசீனப்படுத்தி பதவி உயர்வு தட்டி போகலாம். பொறுமையுடன், கடினமாக உழைத்துக் கொண்டு இருந்தால் அதற்குரிய பலன்கள் கிடைக்கும்.

தொழில், வியாபாரம் செய்பவர்கள் சோம்பலை அகற்றி சுறுசுறுப்புடன் செயல்பட்டால் சீரான வளர்ச்சி இருக்கும். கடன்களை சிறிது சிறிதாக அடைத்து விடுங்கள். கூட்டு தொழில், சிறு தொழில் செய்பவர்களுக்கு வியாபாரம் சீராக இருக்கும். ரியல் எஸ்டேட், அயல் நாட்டில் வர்த்தகம் செய்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும்.

தனுசு ராசி பெண்கள் எதிலும் பணிவாக நடந்து கொள்ளுங்கள். வார்த்தைகளில் கவனம் தேவை. யாரையும் தூக்கியெறிந்து பேசாதீர்கள். முன்கோபத்தை தவிர்த்து விட்டால் பெரியளவில் பாதிப்புகள் மற்றும் சச்சரவுகள் உண்டாகாமல் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம், நண்பர்களிடம், உறவினர்களிடையே வீண் வாக்குவாதத்தைத் தவிர்த்து விடுங்கள். வீட்டில் இருப்பவர்களிடம் விட்டு கொடுத்து செல்லுங்கள். எப்போதோ செய்த தவறுகளை சுட்டிக் காட்டாமல் இருக்க வேண்டும். பிறரிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.

வீட்டில் சுப நிகழ்வுகள் படிப்படியாக நடைபெறும். வீடு, மனை  வாங்கும் யோகம் இருக்கிறது. பணவரவு சீராக இருக்கும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஆடம்பர செலுவகளை கட்டுப்படுத்தி சேமிப்பாக மாற்றிக் கொள்ளுங்கள்.

உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். சுகாதாரமற்ற உணவுகளை தவிர்த்துவிடுங்கள். உடல்நலனி அக்கறைச் செலுத்துங்கள்.

தனுசு ராசி மாணவ மாணவிகளின் கவனம் சிதறும் என்பதால் மனதை ஒருநிலைப்படுத்தி படியுங்கள். நண்பர்களிடம் பொழுதை வீணாக்காமல் பகுதி நேரத்தை பயனுள்ளதாக அமைத்து கொள்ளுங்கள். இதுவரை தடையாக இருந்த விஷயங்கள் யாவும் விலகும். விரும்பிய பாடப்பிரிவில் மற்றும் கல்லூரியில் சேரும் வாய்ப்பு கிடைக்கும்.

பரிகாரம்:

உங்கள் வீட்டருகில் இருக்கும் கோயில்களுக்கு சென்று பிள்ளையார் மற்றும் அனுமனை தரிசித்து வந்தால் தடைகள் அகலும்.

From around the web