தனுசு ராசி மே மாதம் ராசி பலன்கள் 2018!

தனுசு ராசிக்காரர்களே, இந்த மே மாதம் போட்டியில் வெற்றி பெரும் மாதமாக இருக்கப் போகின்றது. வருங்காலத்தை கருத்தில் கொண்டு திட்டங்கள் தீட்டுவீர்கள். புதிய சிந்தனைகள் பிறக்கும். குரு பகவான் பதினோராம் வீட்டில் இருப்பதால் நன்மைகள் நடைபெறும். ராகு பகவான் எட்டாம் வீட்டில் கடக ராசியில் இருப்பதால் சாதகமற்ற பலன்களைத் தருவார். கேது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் தொடர்வதால் அரசு வகையால் பிரச்சனைகள் வரக்கூடும். புதன் மே நான்காம் தேதி வரை சாதகமான பலன்களைக் கொடுப்பார். சுக்கிர
 
Dhanusu may month rasi palan 2018

தனுசு ராசிக்காரர்களே, இந்த மே மாதம் போட்டியில் வெற்றி பெரும் மாதமாக இருக்கப் போகின்றது. வருங்காலத்தை கருத்தில் கொண்டு திட்டங்கள் தீட்டுவீர்கள். புதிய சிந்தனைகள் பிறக்கும். குரு பகவான் பதினோராம் வீட்டில் இருப்பதால் நன்மைகள் நடைபெறும். ராகு பகவான் எட்டாம் வீட்டில் கடக ராசியில் இருப்பதால் சாதகமற்ற பலன்களைத் தருவார். கேது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் தொடர்வதால் அரசு வகையால் பிரச்சனைகள் வரக்கூடும்.

புதன் மே நான்காம் தேதி வரை சாதகமான பலன்களைக் கொடுப்பார்.  சுக்கிர பகவானால் பெரியவர்களின் ஆசி கிட்டும். மே 11, 12, 13 தேதிகளில் உறவினர் வருகையால் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தொழில் அல்லது வியாபாரம் சம்மந்தமாக வெளியூர் பயணங்கள் ஏற்படக்கூடும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெறும் மாதமாக அமையும்.  சூரிய பகவானால் ஏற்பட்ட பிரச்சனைகள் இந்த மே மாதத்தில் ஒரு முடிவுக்கு வரக்கூடும்.

மே 1,2,3,6,7,8 ல் சந்திரனால் சிறு பாதிப்புகள், தடைகள் ஏற்படக்கூடும். குறிப்பாக செய்கின்ற வேலையில் இடையூறு வரக்கூடும். வேலை சம்மந்தமாக ஒரு சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தோடு புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். சகோதர வகையால் எதிர்பாராத பண உதவி கிடைக்கும். மொத்தத்தில் தனுசு ராசியினர் இந்த மே மாதத்தில் திட்டமிட்டு செயல்படும் விஷயங்களில் வெற்றி காண்பார்கள்.

From around the web