தனுசு ராசி ஜூன் மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள தனுசு ராசிக்காரர்களே, இந்த ஜூன் மாதம் எதிலும் நிதானத்துடன் எச்சரிக்கையுடன் செயல்பட கூடிய மாதமாக இருக்கப் போகின்றது. இந்த ஜூன் மாதம் விழிப்புணர்வுவோடு செயல்படுவது நல்லது. திடீர் தொல்லைகள் வரக்கூடும். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் திசை மாறி போகும். உங்கள் ராசிநாதன் குரு பகவான் வக்கிரத்திலும், ஜென்ம சனி வக்கிரத்தில் இருப்பதால் எதிலும் தீர யோசித்த பிறகே முடிவு எடுக்க வேண்டும். ஏதேனும் தொடங்கும்போது ஒரு முறைக்கு பல முறைக்கு சிந்தித்து செயல்பட வேண்டும். இல்லத்தில்
 
Dhanusu june month rasi palan 2018

அன்புள்ள தனுசு ராசிக்காரர்களே, இந்த ஜூன் மாதம் எதிலும் நிதானத்துடன் எச்சரிக்கையுடன் செயல்பட கூடிய மாதமாக இருக்கப் போகின்றது. இந்த ஜூன் மாதம் விழிப்புணர்வுவோடு செயல்படுவது நல்லது. திடீர் தொல்லைகள் வரக்கூடும். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் திசை மாறி போகும். உங்கள் ராசிநாதன் குரு பகவான் வக்கிரத்திலும், ஜென்ம சனி வக்கிரத்தில் இருப்பதால் எதிலும் தீர யோசித்த பிறகே முடிவு எடுக்க வேண்டும். ஏதேனும் தொடங்கும்போது ஒரு முறைக்கு பல முறைக்கு சிந்தித்து செயல்பட வேண்டும். இல்லத்தில் மனக்குழப்பங்கள் ஏற்படக்கூடும். தன்னம்பிக்கை, தைரியம் குறையலாம்.

ஏழரை சனி ஜென்ம சனியாக தொடர்வதால் எண்ணற்ற மாற்றங்கள் நிகழும்.  இரண்டாம் இடத்தில் கேது எட்டாம் இடத்தில் ராகு இருப்பதால் சர்ப்ப தோஷம் பெற்று இருக்கின்றது. பணவரவு சீராக இருந்தாலும் பணிகளை சரியாக முடிக்க இயலாமல் தடைகள் வரக்கூடும். செவ்வாய் பகவான் இரண்டாம் வீட்டில் கேதுவுடன் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல் பட வேண்டிய நேரமாக இருக்கின்றது.

மாத தொடக்கத்தில் சுக்கிரன் ஆறாம் இடத்தில் இருப்பதால் எதிரிகள் தொல்லை கூடும். ஜூன் 9-இந்த தேதிக்கு பிறகு கடகத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கும்போது விபரீத ராஜயோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஜூன் 5-ஆம் தேதி மிதுனத்தில் புதன் வருவதால் இல்லத்தில் இருக்கும் பழைய பிரச்சனைகள் தலைதூக்கும். வீட்டில் இருப்பர்வர்களிடம் விட்டு கொடுத்து செல்லுங்கள். கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் தனுசு ராசியினர் எதிலும் எச்சரிகையுடன் நிதானமாக செயல் பட வேண்டிய மாதமாக இருக்க போகின்றது.

From around the web