தனுசு ஜூலை மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள தனுசு ராசிக்காரர்களே, இந்த ஜூலை மாதம் சிக்கனமும், பொறுமையும் தேவைப்படும் மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் இம்மாதம் வக்ர நிவர்த்தியாகும் பொழுது வளர்ச்சி உண்டாகும். இல்லத்தில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய தொடங்கும். இதுவரை யாரை நம்புவது என்று தெரியாமல் இருந்தீர்கள், இனி யார் நல்லவர், கெட்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொண்டு விலகிவிடுவீர்கள். புதன் சாதகமான வீட்டில் இருப்பதால் புதிய வேலை கிடைக்கும். ஜூலை 5-ம்
 
Dhanusu july month rasi palan 2018

அன்புள்ள தனுசு ராசிக்காரர்களே, இந்த ஜூலை மாதம் சிக்கனமும், பொறுமையும் தேவைப்படும் மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் இம்மாதம் வக்ர நிவர்த்தியாகும் பொழுது வளர்ச்சி உண்டாகும். இல்லத்தில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய தொடங்கும். இதுவரை யாரை நம்புவது என்று தெரியாமல் இருந்தீர்கள், இனி யார் நல்லவர், கெட்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொண்டு விலகிவிடுவீர்கள். புதன் சாதகமான வீட்டில் இருப்பதால் புதிய வேலை கிடைக்கும்.

ஜூலை 5-ம் தேதி சிம்மத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் வேலை சம்மந்தமாக மாற்றங்கள் நிகழும். நேர்முக தேர்வுக்கு சென்று பல முறை முயற்சி செய்தும் தோல்வி சந்தித்தவர்களுக்கு இம்முறை சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் நல்லவை நடைபெறக்கூடும். போதிய அளவுக்கு பணவரவு வரக்கூடும்.

ஜூலை 9-ந் தேதி மகரத்தில் செவ்வாய் வக்ரம் அடைவதால் நல்லவை நடைபெறக்கூடும். பேச்சில் கவனம் தேவை. செயலில் நிதானம் கடைபிடியுங்கள். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். அவ்வாறான சூழல் ஏற்பட்டால் உங்கள் மேற்பார்வையில் வைத்து கொள்வது நல்லது. ஒரு சிலருக்கு கண் எரிச்சல், தொண்டை, மூட்டு வலி வரக்கூடும்.

உங்கள் ராசிக்கு ஜென்ம சனி ஒரு பக்கமும் குருவின் வக்ர இயக்கம் மறுபுறம் இருப்பதால் நினைத்த காரியம் நினைத்த நேரத்தில் முடிக்க இயலாது. பல தடைகள், தடுமாற்றங்கள் சந்திக்க நேரிடலாம்.

ஜூலை 4-ந் தேதி குரு வக்ர நிவர்த்தியாகும்போது செய்கின்ற காரியங்களில் எளிதில் வெற்றி பெறுவீர்கள். இல்லத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையக்கூடும்.

From around the web