தனுசு ராசி சித்திரை மாதம் ராசி பலன்கள் 2018!

தனுசு ராசிக்காரர்களே, இந்த சித்திரை மாதம் உங்கள் கனவுகள் நனவாகும் மாதமாக இருக்கப் போகின்றது. நீங்கள் செய்கின்ற முயற்சிகளில் வெற்றி கிட்டும். இந்த சித்திரை மாதம் தனுசு ராசியினருக்கு தொட்டது துலங்கும் மாதமாக இருக்கப் போகின்றது. வருமானம் உயரும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வீர்கள். உங்கள் சாமர்த்தியத்தால் பழைய பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கட்டுவீர்கள். சூரியன் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கவலைகள் தோன்றக்கூடும். தேவையில்லாத மனக்குழப்பம் வரக்கூடும். குரு பகவான் லாப
 
Dhanusu chithirai rasi palan 2018

தனுசு ராசிக்காரர்களே, இந்த சித்திரை மாதம் உங்கள் கனவுகள் நனவாகும் மாதமாக இருக்கப் போகின்றது. நீங்கள் செய்கின்ற முயற்சிகளில் வெற்றி கிட்டும். இந்த சித்திரை மாதம் தனுசு ராசியினருக்கு தொட்டது துலங்கும் மாதமாக இருக்கப் போகின்றது. வருமானம் உயரும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வீர்கள். உங்கள் சாமர்த்தியத்தால் பழைய பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கட்டுவீர்கள்.

சூரியன் ஐந்தாம் வீட்டில் இருப்பதால்  பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கவலைகள் தோன்றக்கூடும். தேவையில்லாத மனக்குழப்பம் வரக்கூடும். குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பதால் செய்கின்ற முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இல்லத்தில் சுப விசேஷங்கள் அடுத்தடுத்து நடைபெறும். ராகு பகவான் எட்டாம் வீட்டிலும், கேது பகவான் இரண்டாம் வீட்டிலும் இருப்பதால் வீண் சந்தேகம் வரக்கூடும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லுங்கள். கணவன் மனைவியிடையே அவ்வப்பொழுது வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். விட்டு கொடுத்து செல்லுங்கள். மூன்றாம் நபரிடம் குடும்ப விஷயங்களை சொல்லிக் கொண்டு இருக்க வேண்டாம்.

செவ்வாய் பகவான் 30-4-2018 அன்று கேது பகவானோடு இரண்டாம் வீட்டில் இணைவதால் பேச்சில் நிதானம் தேவை. செலவுகள் கட்டுப்படுத்த முடியாமல் அடுத்தடுத்து இருந்து கொண்டே இருக்கும். சுக்கிரன் பகவான் 21-4-2018 முதல் 14-5-2018 வரை ஆறாம் இடத்தில் மறைவதால் எதிர்ப்புகள் இருந்து கொண்டே இருக்கும். எந்த காரியம் செய்ய தொடங்கினாலும் முதல் முயற்சியில் செய்ய முடியாமல் போகும். அலுவலகத்தில் இதுவரை நீங்கள் பட்ட துயரங்கள் யாவும் விலகி நல்லவை நடைபெறும் மாதமாக இருக்கப் போகின்றது.

From around the web