கிரகங்கள் பலமாக இருந்தால் ஏற்படக்கூடிய பலன்கள்!

ஒருவரது சுயஜாதகத்தில் கிரகம் பலமாக அமைந்தால் என்ன பலன்கள் நடைபெறும் என்பதை விரிவாக காணலாம். சூரியன்: சூரியன் பலமாக இருந்தால் நல்ல செல்வம், பதவி, அதிகாரம் செய்ய கூடிய வேலை கிடைக்கும். நல்ல மணவாழ்க்கை அமையும். கர்வம், கோபம் இருக்கும். சந்திரன்: சந்திரன் பலமாக இருந்தால் பந்தங்கள், உறவினர்கள், நண்பர்களிடம் அதிகம் பாசமாக இருப்பார்கள். அறுசுவை உணவு விரும்பி உண்பது, விதவிதமாக சாப்பிடுவது, செய்வது என்று இருப்பார்கள். ஆடம்பர பொருள் சேர்க்கை, கடல் சார்ந்த பயணங்கள் ஏற்படும்.
 

ஒருவரது சுயஜாதகத்தில் கிரகம் பலமாக அமைந்தால்  என்ன பலன்கள் நடைபெறும் என்பதை விரிவாக காணலாம்.

கிரகங்கள் பலமாக இருந்தால் ஏற்படக்கூடிய பலன்கள்!

சூரியன்:

சூரியன் பலமாக இருந்தால் நல்ல செல்வம், பதவி, அதிகாரம் செய்ய கூடிய வேலை கிடைக்கும். நல்ல மணவாழ்க்கை அமையும். கர்வம், கோபம் இருக்கும்.

சந்திரன்:

சந்திரன் பலமாக இருந்தால் பந்தங்கள், உறவினர்கள், நண்பர்களிடம் அதிகம் பாசமாக இருப்பார்கள். அறுசுவை உணவு விரும்பி உண்பது, விதவிதமாக சாப்பிடுவது, செய்வது என்று இருப்பார்கள். ஆடம்பர பொருள் சேர்க்கை, கடல் சார்ந்த பயணங்கள் ஏற்படும். ஆடை, ஆபரம், உணவு விடுதி, நவரத்தின அணிகலன்கள் கிடைக்கும்.

செவ்வாய்:

சுயஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருப்பவர்கள் துருதுருவென்று இருப்பார்கள். கம்பீரமாக, தைரியமாக செயல்படுவார்கள். வீடு, மனை, தோட்டம், பயிர் விளையும் நிலங்கள், அதிகாரம் செய்யக்கூடிய பதவி கிடைக்கும்.

சனி:

சனி பலமாக இருந்தால் செய்யும் வேலையில் மனத் திருப்தி ஏற்படும். சுயதொழில், வியாபாரம், பெரிய தொழில் நிறுவனம் வைத்து செய்பவர்களுக்கு சனி பலமாக இருக்கும்.

புதன்:

புதன் ஜாதகத்தில் பலமாக இருந்தால் பேச்சு, எழுத்து, கணிதம் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள். வசதி வாய்ப்புடன் இருப்பார்கள். அனைவருக்கும் உதவி செய்வது, இயல்பாக பழகுவது, அனைவரையும் அரவணைத்து வாழும் ஒரு நளினம் இருக்கும்.

சுக்ரன்:

சுக்ரன் பலமாக இருந்தால் கவர்ச்சியான முக அமைப்பு, சுகமான சொகுசான வாழ்க்கை, ஆடைகள், அணிகலன்கள், சுவையான உணவு போன்றவை கிடைக்கும். பெரும்பாலும் காதல் செய்து மணம் செய்து கொள்வார்கள். பிறரை எளிதில் கவரும் விதமாக இருப்பார்கள். பகட்டான வீடு, வாகனம், வசதி, வாய்ப்புடன் இருப்பார்கள்.

குரு:

குரு பலமாக இருப்பவர்கள் நல்ல நேர்மையாகவும், நீதிக்கு கட்டுபட்டும் இருப்பார்கள். பணம் பலம், பதவி உயர்வு, புத்திர பலம், குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். இவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள். தெய்வீக வழிபாடு செய்வதில் மகிழ்ச்சி அடைவார்கள்.

ராகு/கேது:

சாயகிரகமான ராகு பொருள் சேர்க்கையும், செல்வ நிலை உயர்த்தவும் செய்வார். சுகவாழ்வில் களங்கமும் ஏற்படுத்துவார். அவரவரின் வயது கேற்ப சிறு களங்கம் ஏற்படுத்துவார். கேது சுகவாழ்வில் விவேகத்தை கொடுப்பார்.

From around the web