ஜோதிடப்படி இன்றிலிருந்து கொரோனா வேகம் குறையுமா

கொரோனா வேகம் கட்டுக்குள் வருவது போல் தெரியவில்லை என்றாலும், ஜோதிடர்களும் அவரவர்களுக்கு தெரிந்த கணிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான ஜோதிடர்களின் கருத்து மகரத்தில் கடந்த மாதம் 22ல் சென்று செவ்வாய் சேர்ந்தது. செவ்வாய் உஷ்ணமான கிரகம், மனதை ரணமாக்கும் ஒரு கிரகம். எப்போதும் செவ்வாயும் சனியும் இணைந்து ஏதாவது ஒரு ராசிக்குள் வரும்போது அதற்கேற்றது போல் கடுமையன விளைவுகளை தந்தாலும், விருச்சிகம், மேஷம் போன்ற செவ்வாய் வீட்டில் சனி இருப்பதும், சனி வீட்டில் செவ்வாய் இருப்பதும் பொதுவாக
 

கொரோனா வேகம் கட்டுக்குள் வருவது போல் தெரியவில்லை என்றாலும், ஜோதிடர்களும் அவரவர்களுக்கு தெரிந்த கணிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜோதிடப்படி இன்றிலிருந்து கொரோனா வேகம் குறையுமா

பெரும்பாலான ஜோதிடர்களின் கருத்து மகரத்தில் கடந்த மாதம் 22ல் சென்று செவ்வாய் சேர்ந்தது. செவ்வாய் உஷ்ணமான கிரகம், மனதை ரணமாக்கும் ஒரு கிரகம். எப்போதும் செவ்வாயும் சனியும் இணைந்து ஏதாவது ஒரு ராசிக்குள் வரும்போது அதற்கேற்றது போல் கடுமையன விளைவுகளை தந்தாலும், விருச்சிகம், மேஷம் போன்ற செவ்வாய் வீட்டில் சனி இருப்பதும், சனி வீட்டில் செவ்வாய் இருப்பதும் பொதுவாக பாதகத்தையே தரும்.

தற்போது ஒரு மாத காலமாக சனி வீடான மகர வீட்டில் இருந்து வந்த செவ்வாயால்தான் கடுமையான லாக் டவுன் ஏற்பட்டது, மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்தாலும் என்ன செய்வது என எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுவது, வெளியே சென்று போலிசிடம் அடிவாங்கியது, அதனால் தகராறுகள் என செவ்வாயும் சனியும் சேர்ந்து மக்களை பீதிக்குள்ளாக்கி ரணகளமாகவே வைத்திருந்தன. இது செவ்வாய் சனி உச்சம் ஆட்சி பெற்று ஒரு வீட்டில் இருந்ததால் நடந்த நிகழ்வு என கூறப்படுகிறது.

நேற்று இந்த சேர்க்கை விலகி விட்டதால் கொரோனா செயினும் விலகி விடும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. அதனால் பல தளர்வுகள் ஏற்பட்டு இன்றிலிருந்து 1 மாதத்திற்குள் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக திரும்பும் சூழல் உருவாகி விடும் என நம்பிக்கை வந்துள்ளது.

கண்டிப்பாக நல்லதே நடக்கும் நல்லதே நினைப்போம்.

From around the web