ஜோதிடம் முழுவதும் கற்க வேண்டுமா

நம்மில் பலருக்கு ஜோதிடம் கற்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதை பற்றிய ஆர்வம் இருப்பவர்கள் உடனே கற்றுக்கொள்வார்கள் என்றாலும் இணையத்தில் கிடைக்கும் பல தகவல்களை படித்து எதை முதலில் படிக்க வேண்டும் எதை இரண்டாவது படிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் எல்லாவற்றையும் படித்து மனம் குழப்பமடைகிறார்கள். சிலர் ஜோதிட ஆசான்களை சந்தித்து நேரில் கற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையிலும் இருப்பார்கள்.

இவர்களுக்காக ஆரம்ப காலங்களில் வந்த ஒரு புத்தகம்தான் தி லிட்டில் ப்ளவர் கம்பெனி வெளியிட்ட குடும்ப ஜோதிடம் என்ற புத்தகம். பள்ளிக்கூடத்தில் ஆ, ஆ , ஏபிசிடி எல்லாம் எப்படி படித்து தமிழ் ஆங்கிலம் எழுத படிக்க கற்றுக்கொள்கிறோமோ அது போலத்தான் இந்த நூலும் முறைப்படி ஜோதிடம் படிக்க மூலமாக இந்த நூலை படித்து தெரிந்து கொள்ளலாம். இந்த நூலை படித்து ஜோதிட அடிப்படையை தெரிந்துகொண்ட பின்பு அடுத்த நூல்களை படிக்கலாம்.

இந்த நூல் பிடிஎஃப் ஆக தரவிரக்கவும் செய்ய இணையத்தில் கிடைக்கிறது.

மேலும் ஜோதிடம் கற்க 2007ம் ஆண்டில் இருந்து classroom2007  என்று  ப்ளாக் ஒன்று உள்ளது. இணையத்தில் சேர்ச் செய்து பார்த்தால் சுப்பையா வாத்தியார் என்பவர் 2007ம் ஆண்டில் இருந்து ஜோதிட பாடங்களை வரிசையாக அதில் வெளியிட்டு வருகிறார். ஜோதிட அடிப்படையில் இருந்து, அதன் உயர்ந்த நிலை வரை பாடங்கள் உள்ளது விரும்புவோர் படித்து ஜோதிடம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print