நாக பஞ்சமி திதி கூறுகின்ற ஜோதிட பலன்கள்…..

90de2ca2fb306c29b6953b5b1625f41f

ஜோதிடம் என்பது நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. இந்த நவீன காலங்களில் கூட ஜோதிடம் என்பது நம் தேவைகளில் ஒன்றாகிவிட்டது. 

இப்படி வாழ்க்கையின் பாதி அங்கமான நம்மில் நுழைந்து விட்ட ஜோதிடத்தில் கூறப்படும் நலம் தரும் திதிகளைப் பற்றி தான் பல நாட்களாகவே பார்த்து கொண்டு வருகிறோம். இன்று பஞ்சமி திதி என்ன பலனை சொல்கிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.

இந்த பஞ்சமி திதி நாளில் அனைத்து விதமான சுப காரியங்களையும் செய்யலாம். எவரேனும் அவசியமாக  அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருந்தால் இந்நாளில் அறுவை சிகிச்சையை மேற்கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் இந்நாளில் அறுவை சிகிச்சை செய்தால் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

மேலும் இந்நாளில் கர்ப்பிணி பெண்களுக்கு சீமந்தம் போன்ற சுப காரியங்களை செய்வது அந்த பெண்ணிற்கும், வயிற்றில் உள்ள அவர்களின் குழந்தைக்கும் மிகவும் நல்லது. மேலும் இந்நாளில் நாக தேவதைகள் அதீத சக்திகளுடன் விளங்குவார்களாம். எனவே இந்த திதி நாக தேவதையை வழிபாடு செய்வதற்கு உகந்த தேதி.

இந்நாளில் நாக தோஷம் உள்ளவர்கள் நாகர் சிலைக்கு பால் ஊற்றி பூஜை செய்து வழிபடுவதன் மூலம் தோஷம் நீங்கி திருமண தடைகள் விலகும்.

எனவே தான்  நாக பஞ்சமி திதி மிகவும் விசேஷ தன்மையுடைய பலனை கொடுக்கின்ற திதி என்று கூறுவர்.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.