உதவி பேராசிரியர்கள் பணிக்கு வருவதை தடுக்கவில்லை – அறக்கட்டளை விளக்கம்!!

பச்சையப்பன் கல்லூரிகளின் 254 உதவி பேராசிரியர்கள் பணிக்கு வருவதை தடுக்கவில்லை என பச்சையப்பன் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் 2013-2014-ம் ஆண்டு வரையில் உதவி பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதால் இது சம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும் என வழக்குகள் தொடரப்பட்டது.

அதிமுக பொதுக்குழு வழக்கு: உச்சநீதிமன்றம் புதிய தீர்ப்பு!!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் கல்லூரியில் நியமிக்கப்பட்ட 254 உதவி பேராசிரியர்களின் நியமனம் செல்லாது என அறிவித்திருந்தார். இதனை எதிர்த்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவு படி பேராசிரியர்கள் பணிக்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் வருகைபதிவேடானது கல்லூரி முதல்வர் அறைக்கு எடுத்துசெல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி பள்ளியை மீண்டும் திறக்கலாமா? – ஐகோர்ட் புதிய உத்தரவு!!

அதே சமயம் அறக்கட்டளை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பேராசிரியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை என்றும் அவர்கள் பணிக்கு வருவதை யாரும் தடுக்கவில்லை என தெரிவித்தனர்.

அப்போது பேசிய நீதிபதி பேராசிரியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை என்பது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என கூறி விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.