’சார்பாட்டா பரம்பரை’ படத்தின் உதவி பெண் இயக்குனர்: ‘வேம்புலி’ பதிவு செய்த டுவிட்

ec018aae8a5bbbef7f3e38981f6b6048

சமீபத்தில் வெளியான ’சார்பாட்டா  பரம்பரை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவருமே தற்போது பிரபலமாகி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

குறிப்பாக வேம்புலி ஆக நடித்த நடிகர் ஜான் கொக்கன் என்பவர் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டார் என்பதும் அவருக்கு தமிழ் திரையுலகில் அதிக வாய்ப்புகள் கிடைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது 

இந்த நிலையில் வேம்புலி கேரக்டரில் நடித்த ஜான் கொக்கன் சமீபத்தில் தனது டுவிட்டரில் இந்த படத்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்த பெண் ஒருவரின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அவரது பெயர் ஜென்னி என்றும் அவர்தான் தனக்கு அனைத்து வசனங்களையும் பேசுவதற்கு உதவி செய்தார் என்றும் வேம்புலி என்ற கேரக்டரில் நான் ஒன்றிப்போய் நடிப்பதற்கு அவர் மிகுந்த உதவியாக இருந்தார் என்றும் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பின்போது அவரது உதவி தனக்கு மிகப்பெரிய அளவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.