
செய்திகள்
தமிழக அரசின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவி-சட்டப்பேரவையில் தீர்மானம்.!
தற்போது இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இலங்கைக்கு உதவ ஒவ்வொரு நாடுகளும் தயங்கிக் கொண்டு வருகிறது. ஆனால் நம் இந்திய அரசோ தொடர்ந்து வரும் பல்வேறு விதமான உதவிகளை செய்து கொண்டு வருகிறது.
இதனை போல் நம் தமிழக அரசும் இலங்கைக்கு உதவ பல்வேறு முயற்சிகளை செய்து கொண்டு வருகிறது. ஆயினும் மத்திய அரசின் அனுமதிக்காக காத்து கொண்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவி செய்வது குறித்து இன்று சட்டசபையில் தீர்மானம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப மத்திய அரசு அனுமதிக்கக் கோரி சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
அரசினர் தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிய உள்ளார். அரிசி, பருப்பு, பால் பொருட்கள் முக்கிய அத்தியாவசிய பொருள், உயிர் காக்கும் மருந்து களையும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
உடனடியாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யவும், அனுமதி அளிக்க வலியுறுத்தும் அரசினர் தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிகிறார்.
