Connect with us

“சொத்துக்குவிப்பு வழக்கு”: ராஜேந்திரபாலாஜி தொடர் பின்னடைவு!!

News

“சொத்துக்குவிப்பு வழக்கு”: ராஜேந்திரபாலாஜி தொடர் பின்னடைவு!!

5c0d11e855c3c809aac350296279aa63

தற்போது நம் தமிழகத்தில் எதிர்க் கட்சியாக உள்ளது அதிமுக. மேலும் பத்து ஆண்டுகளாக தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்தது. இந்த அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் எதிர்க் கட்சியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  அதிமுக சார்பில் போட்டியிட்ட பல அமைச்சர்கள் தங்களது தொகுதியில் பின்னடைவை சந்தித்தனர் என்பது தேர்தல் முடிவில் தெரிந்தது. இந்த நிலையில் அதிமுகவின் பல முக்கிய நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் மீது அவ்வப்போது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்படும்.a2743bfe6b8eb6606a7a46ad501aa503-1

இந்த  நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகள் விசாரணைக்கு தடை இல்லை என்று கூறப்பட்டுள்ளது. தடை விதிக்க வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.

வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதி எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் நிபந்தனை அளித்துள்ளது. மேலும் உச்சநீதிமன்ற உத்தரவால் சொத்து வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் தொடர்வார். வருமானத்துக்கு அதிகமாக ராஜேந்திரபாலாஜி 7 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக  உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை தொடருவது குறித்து சென்னை ஹைகோர்ட் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு அளித்திருந்தது. மாறுபட்ட தீர்ப்பை அடுத்து மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு வந்தது ராஜேந்திர பாலாஜியின் சொத்து குவிப்பு வழக்கு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top