ஜன.9-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் – சபாநாயகர் அப்பாவு!

தமிழகத்தில் வருகின்ற 2023ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு முன்பு ஜனவரி முதல் வாரத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டில் வருகின்ற ஜனவரி 9-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது.

ஜன.9-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் – சபாநாயகர் அப்பாவு!

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வரலாம் என்றும் இருப்பினும் கட்டாயம் இல்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

அதே போல் புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி ஆகியோருக்கு இடையே இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
மாணவிக்கு மஞ்சள் கயிறு கட்டிய விவகாரத்தில் திடீர் திருப்பம்!!

இந்த கூட்டத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்ப எதிர்கட்சியினர் திட்டுமிட்டு உள்ளனர். அதே போல் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, ஆவின் பால் பொருட்கள் விலை குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.