செய்திகள்
“கலைவாணர் அரங்கில்” ஆகஸ்ட் 13 ஆம் தேதி சட்டமன்ற கூட்டம் தொடக்கம்!!
நம் தமிழகத்தில் தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. மேலும் தமிழகத்தில் கடந்த தேர்தலில் பெரும்பான்மை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்துள்ளது திமுக மேலும் பத்தாண்டுகளாக எதிர்க்கட்சியாக தமிழகத்தில் திமுக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தின் முதல்வராக உள்ளார் திமுக கட்சி தலைவரான மு க ஸ்டாலின் மேலும் அவருடன் சேர்த்து தமிழகத்தில் 34 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போதைய திமுக அரசின் ஆட்சியில் முதன்முறையாக தமிழ்நாடு பட்ஜெட் இந்த மாதம் 13ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் என்றும் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அதே தேதியில் தமிழ்நாட்டில் சட்டமன்ற கூட்டம் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதனை பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார் அதன்படி சட்டமன்ற கூட்டம் தொடங்கும் முதல் நாளிலேயே தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடிய உடன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சராக உள்ள பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
