சட்டப்பேரவை கூட்டம்! எம்.எல்.ஏ.க்கள் உடன் இ.பி.எஸ் மீண்டும் ஆலோசனை!!

சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உடன் ஈ.பி.எஸ் மீண்டும் ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சம் தொட்ட நிலையில், கடந்த ஜூலை மாதம் நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.

இத்தகைய தீர்ப்பானது ஓபிஎஸ் தரப்பினருக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதே சமயம் இன்று நடைப்பெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இபிஎஸ் மற்றும் அவரது தொண்டர்கள் புறக்கணித்தனர்.

குறிப்பாக ஓபிஸ், இபிஎஸ் இருக்கைகள் மாற்றப்படாமல் இருந்ததால் சட்டப்பேரவை கூட்டத் தொடர் மாற்றப்படாமல் இருந்ததாக தெரிவித்தனர். இருப்பினும், அதிமுக-வின் 11-வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டு வருவதால் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்கவில்லை இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உடன் ஈ.பி.எஸ் மீண்டும் ஆலோசனை நடத்த இருப்பதாக அதிமுக வட்டாரங்களில் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment