குஜராத்தில் சட்டமன்ற தேர்தல்: இரண்டு கட்டங்களாக அறிவிப்பு!

குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் ஹிமாச்சலப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும், குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

அதன் படி, முதற்கட்டமாக டிசம்பர் 1-ம் தேர்தல் நடைப்பெறுவதாகவும், இரண்டாம் கட்டமாக டிசம்பர் 5-ம் தேதி தேர்தல் நடைப்பெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment