ஒரு கிலோ டீத்தூள் ரூ.1.15 லட்சம்.. அப்படி என்ன இருக்கு இந்த டீத்தூளில்?

ஒரு கிலோ டீத்தூள் ரூ.1.15 லட்சம்.. அப்படி என்ன இருக்கு இந்த டீத்தூளில்?

டீ என்பது இந்தியர்களின் வாழ்க்கை முறைகளில் ஒன்றாக கலந்து விட்டது என்பதும் காலை எழுந்தவுடன் டீ குடிக்காமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதும் தெரிந்ததே.

டீ குடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும் என்ற மனநிலை கிட்டத்தட்ட எல்லோரும் வந்து விட்டதால் டீ குடிப்பதை அனைவரும் வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டீ வகைகள் பல வகையாக இருந்தாலும் அசாம் மாநிலத்தில் உள்ள டீ வகைகளுக்கு மிகவும் கிராக்கி இருக்கும் என்பதும் பொதுமக்கள் அதை விரும்பி வாங்கி குடித்து வருவார்கள் என்பதும் தெரிந்ததே.

manohari teaஇந்த நிலையில் அசாம் மாநிலத்தில் விளையும் ஒரு அபூர்வ வகை டீ மனோஹரி டீ என்பது குறிப்பிடத்தக்கது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த டீசல் விளையும் என்பதும் இந்த டீத்தூள் இணையதளம் ஏலம் விடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த ஆண்டு விளைந்த மனோஹரி டீத்தூள் ஒரு கிலோ ரூ.1.15 லட்சத்திற்கு ஏலம் போய் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த டீத்தூளில் அப்படி என்ன விசேஷம் என்றால் மிகவும் மணமாகவும் சுவையாகவும், உலகில் இதுவரை எங்கும் கிடைக்காத வகையில் சுவையாகவும் இந்த டீ இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த டீத்தூளை இணையதளம் மூலம் ஏலம் எடுத்தவர் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.