வியாபாரிகளே உஷார்!! ‘ QR Code’- ஐ வைத்து டெக்னிக்காக திருடும் ஆசாமிகள்..
பெரிய வணிக வளாகம் முதல் சிறிய தள்ளுவண்டி கடை வரை குகூள் பே, பேட்டியம் ஆகிய செயலிகளில் ‘ QR Code’-ஐ அட்டைகள் மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெருவது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் 10 ரூபாய் டீ முதல் பல்லாயிரக்கனக்கான பொருட்கள் வரை ‘ QR Code’ கோடு மூலமாகவே வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தி வருகின்றனர். டிஜிட்டல் பணபரிவர்த்தனை அதிகரித்து உள்ள நிலையில் அனைத்து கடைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு தெரிவது போல் ‘ QR Code’ அட்டைகள் ஒட்டப்பட்டு உள்ளனர்.
இப்படி ஒட்டப்பட்ட ‘ QR Code’- ஐ பயன்படுத்தி திருப்பூரில் நூதன மோசடி நடந்துள்ளது. திருப்பூரை சேர்ந்த துரைச்சாமி என்பவர் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் வாடிக்கையாளர் ஒருவர் ‘ QR Code’- ஐ ஸ்கேன் செய்து பணத்தை செலுத்தியுள்ளார்.
பணம் துரைசாமியின் கணக்குக்கு செல்லாததால் மீண்டும் ஒரு முறை ஸ்கேன் செய்து இருக்கிறார். அப்போது ‘ QR Code’ இல் வழக்கமாக வரும் துரைசாமியின் பெயரில்லாமல் வேறு பெயரில் இருந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக உணவக உரிமையாளரிடம் தெரிவித்து இருக்கிறார்.வங்கியின் ‘ QR Code’ ஸ்டிக்கர் வாங்கிய நிறுவனத்திடம் துரைசாமி விசாரித்து இருக்கிறார். அவர்கள் உணவகத்தில் ஆய்வு செய்த போது அங்கு ஒட்டியிருந்த ஸ்டிக்கரில் வேறு ‘ QR Code’ ஒட்டப்பட்டது கண்டிப்பிடிக்கப்பட்டது.
இதனால் உணவகம் மற்றும் அருகில் இருந்த கடைகளில் சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் அப்பகுதியில் உள்ள உணவகம் ,மளிகை கடை போன்ற வாசலில் ஒட்டப்பட்ட அனைத்து கடைகளிலும் தான் கொண்டுவந்த ‘ QR Code’ ஒட்டப்பட்டது ஆய்வில் தெரியவந்தது.
இந்த மோசடி குறித்து உணவக உரிமையாளர் துரைசாமி மற்றும் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வங்கியின் கணக்கை வைத்து மோசடி நபரை தேடி வருகின்றனர்.
