ஷாருக்கான் யார்? முதலமைச்சரின் கேள்வியால் அதிர்ந்த ரசிகர்கள்!

பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் யார் என அசாம் முதலமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஷாருக்கான் நடித்த ’பதான்’ திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஒரு பக்கம் ரசிகர்கள் மத்தியில் ஆதரவும் இன்னொரு பக்கம் இந்து அமைப்புகள் பக்கம் எதிர்ப்பும் கூறப்பட்டு வருகிறது.

pathan

’பதான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் அந்த பாடலில் நடிகை தீபிகா படுகோனே காவி உடையில் ஆபாசமான உடை அணிந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இந்து அமைப்புகள் இந்த படத்திற்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர் என்பதும் அதே நேரத்தில் ஷாருக்கான் ரசிகர்கள் இந்து அமைப்புகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பதான்’ திரைப்படத்திற்கு எதிராக அசாம் மாநிலத்தில் பஜ்ரங் தள் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ’பதான்’ திரைப்படத்தின் போஸ்டர்களும் கிழித்தெறியப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

pathan3இந்த நிலையில் அசாம் முதல்வர் முதல்வரிடம் இந்த பிரச்சனை குறித்து கேள்விகள் கேட்டபோது, ‘இந்த பிரச்சனை குறித்து பாலிவுட் பிரபலங்கள் பலர் என்னை தொடர்பு கொண்டபோதிலும் ஷாருக்கான் என்னை அழைக்கவில்லை. அவர் அழைத்தால் தான் இந்த விஷயத்தில் நான் தலையிட்டு என்ன பிரச்சனை என்பதை கேட்க முடியும். ஆனால் அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு மீறப்பட்டிருந்தால் சட்டத்தை மீறியவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் ஷாருக்கான் யார் என்பது குறித்தும் அவரது ’பதான்’ படம் குறித்தும் தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் இன்னொரு கேள்விக்கு பதில் அளித்தார். இந்த பதில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் தெரிந்த ஒரு பிரபல நடிகரான ஷாருக்கானை தனக்கு தெரியாது என ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் கூறியது பெரும் அதிர்ச்சியை அவரது ரசிகர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.