நீ எல்லாம் ஏன் நடிக்க வந்தனு கேட்டாங்க…. அஜித் பட நடிகர் உருக்கம்….!

இன்னும் பல நடிகர்கள் திறமை இருந்தும் பெரிய அளவில் கண்டுகொள்ளப்படாமல் உள்ளனர். அந்த வகையில் தனது எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் ஈர்த்த நடிகர் விதார்த் இன்னும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறி வருகிறார்.

vidhaarth

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் மூலம் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் விதார்த். அதனை தொடர்ந்து கிடைத்த படத்தில் நடிப்போம் என்று நினைக்காமல் தனக்கான கதைகளை பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வந்தார்.

அந்த வகையில் விதார்த் நடிப்பில் வெளியான குரங்கு பொம்மை, குற்றமே தண்டனை போன்ற படங்கள் மிகவும் அருமையான கதைகளங்களை கொண்டிருக்கும். மேலும் விதார்த்தும் ஹீரோ தான் என்று இல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான அன்பறிவு படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார்.

இந்நிலையில் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கை குறித்து பேசியுள்ள விதார்த், “சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்த பொழுது சில காரணங்களால் என்னால் நடிக்க முடியவில்லை. அதன் பின்னர் தான் ஒளிப்பதிவாளர் ஒருவர் மூலம் அந்த வாய்ப்பு சக நண்பரான விஜய் சேதுபதிக்கு கிடைத்தது.

வாழ்க்கையின் ஒவ்வொரு ஆரம்பமும் எல்லோருக்கும் அவமானமாகத்தான் இருக்கும். அப்படியான அவமானங்களை சந்தித்தால்தான் நாம் வளர முடியும். ஆரம்பத்தில் என்னை பார்த்து ஒழுங்கா நடக்கவே தெரியல உனக்கு முதல்ல ஒழுங்கா நட உனக்கெல்லாம் சேரன் சார் மாதிரியான ஆள் பொற்காலம் படம் எடுத்தால்தான் சரியா இருக்கும்னு சொன்னாங்க.

எல்லா துறையிலையும் அவமானம் இருக்கும். அதல்லாம் கடந்துதான் வரனும்” என தனது அனுபவங்களால் பட்ட வலிகளை மற்றவர்களுக்கு வழியாக கூறியுள்ளார் விதார்த்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment