இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து உயரும்: ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு!
கடந்த சில வருடங்களுக்கு பின்பு நம் இந்தியாவின் பொருளாதார மதிப்பு தற்போது மெல்ல மெல்ல அதிகரித்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து உயரும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.
அதன்படி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2022-2023 ஆம் நிதியாண்டில் 7.5 சதவீதமாக இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது. உட்கட்டமைப்பு திட்டங்களில் பொது முதலீடும் தனியார் முதலீடும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்றும் ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.
தடுப்பூசி இயக்கக் செயல்பட்டால் நீடித்த பொருளாதார மீட்சி பாதையில் இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்றும் ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது. தடுப்பூசி இயக்கத்தால் மூன்றாம் அலையின் கடுமையான தாக்கம் குறைந்து பொருளாதார செயல்பாடு வேகம் எடுத்துள்ளது என்று ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.
பொருளாதார உட்கட்டமைப்பு, போக்குவரத்துக் கட்டமைப்பு, உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம், உழவர் வருமானம் உயர்த்த வழிவகை ஆகியன அரசின் கொள்கைகள் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்கிறது. அரசின் கொள்கைகள் பொருளாதார மீட்சிக்கு தூண்டுதலாக அமைந்துள்ளன என்றும் ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.
