மீண்டும் இணையும் அசோக் செல்வன்- விக்னேஷ் ராஜா கூட்டணி… போர் தொழில் இரண்டாம் பாகம் வருகிறதா…

இயக்குனர் விக்னேஷ் ராஜா வளர்ந்து வரும் இயக்குனர், எழுத்தாளர் மற்றும் எடிட்டர் ஆவார். ‘ஐ ஹேட் யூ- ஐ லவ் யூ என்ற குறுந்தொடரின் மூலமாக இயக்குனராகும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு வருட காலமாக உருவாக்கிய க்ரைம் திரில்லர் கதையை தனது கல்லூரி நண்பனான அசோக் செல்வனை வைத்து எடுக்க முடிவு செய்தார். அப்படி உருவானது தான் ‘போர் தொழில்’.

‘போர் தொழில்’ திரைப்படம் நடிகர் அசோக் செல்வன், நடிகர் சரத்குமார், நடிகை நிகிலா விமல் போன்ற பலர் நடித்த க்ரைம் த்ரில்லர் படமாகும். இது கடந்த ஆண்டு திரையிடப்பட்டு பின்பு சோனிலிவ் ஓடிடியிலும் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

‘ராட்சசன்’ போன்ற சில க்ரைம் திரில்லர் படங்கள் தான் நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும். அதன் வரிசையில் போர் தொழிலையும் சேர்த்துக் கொள்ளலாம். படத்தின் அடுத்த நிமிடம் என்ன என்று பார்வையாளர்களை பரபரப்பாக வைத்தது என்றே சொல்லலாம். அப்படி ஒரு திரைக்கதையும் சிறப்பான நடிகர்களாலும் இப்படம் வெற்றி அடைந்தது.

நடிகர் அசோக் செல்வனுக்கும் இத்திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. நடிகர் சரத்குமார் அவர்களை பற்றி கூற வேண்டியதே இல்லை. ஒரு சிறு வலியானாலும், உணர்ச்சியானாலும் கச்சிதமாக தன் முகத்தில் காட்டி பார்ப்போரின் மனதை தொட்டு விடுவார். பார்வையாளர்களை உணர்ச்சிவசப்பட வைத்துவிடுவார்.

இயக்குனர் விக்னேஷ் ராஜா தனது அறிமுக படத்திலேயே தனி முத்திரையை பதித்துவிட்டார். போர் தொழிலின் வெற்றிக்கு பிறகு, தற்போது, விக்னேஷ் ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிகர் அசோக் செல்வன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது போர் தொழில் படத்தின் இரண்டாம் பாகமாக கூட இருக்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...