Connect with us

ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீன் மனு: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!!

ashish

செய்திகள்

ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீன் மனு: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!!

மத்திய அமைச்சர் அஜய் குமாரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உத்தரப் பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஏராளமானோர் அக்டோபர் 3ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய அமைச்சர் அஜய் குமாரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா லக்கிம்பூர் கேரியில்  விவசாயிகள் பேரணிக்குள்  வாகனத்தை செலுத்தி பலர் பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இதற்கு பலபேர் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்ய வேண்டும் என பல பேர் குரல் கொடுத்து வந்தனர். அதன் ஒரு பகுதியாக கைதுசெய்யப்பட்ட நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றம் பிப்ரவரி 10-ம் தேதி இவருக்கு ஜாமீன் வழங்கியது.

அப்போது ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுப்படி செய்தது. இந்நிலையில் மத்திய அமைச்சரின் மகன் விவசாயிகள் படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டது உறுதியானது.

இந்த சூழலில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என உத்தரபிரதேச அரசு கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 26-ம் தேதிக்குள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top