பாபநாசம் படத்துக்கு பிறகு தமிழில் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- ஆஷா சரத்

கமல் நடித்த பாபநாசம் படத்தில் உயர் போலீஸ் அதிகாரியாகவும் அதே நேரத்தில் மகனை இழந்த தாயாகவும் நடித்தவர் ஆஷா சரத்.

கமல்ஹாசனிடம் இவர் துல்லியமாக விசாரிப்பதும் ஒரு பக்கம் மகனை இழந்த அம்மாவாக இவர் கதறி அழுது நடித்திருந்தது ரசிகர்களுக்கு பிடித்து இருந்தது.

தற்போது மீண்டும் இவர் ஆதி நடித்த அன்பறிவு படத்தில் ஆதிக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

இப்படத்தில் நடித்தது குறித்து இவர் கூறியதாவது.

தமிழ் திரை துறையில் எனது நடிப்புக்கு கிடைத்து வரும்  அங்கீகாரம்  மகிழ்ச்சி அளிக்கிறது.

த்ரிஷ்யம் படத்தொடர்  எனது கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இயக்குனர் ஜீத்து ஜோசப் எனக்கு நல்ல கேரக்டரை வழங்கினார். அதில் எனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அதன்  தமிழ் ரீமேக் மூலம் கமல்ஹாசனை  போன்ற மிக சிறந்த நடிகருடன்  நடிக்கும் நல்ல வாய்ப்பு அமைந்தது

எனது நடிப்பை விமர்சகர்கள் மக்கள்  பாராட்டியது  எனக்கு ஆச்சரியம் அளித்தது. இப்போது, அன்பறிவு படத்தில் எனது கதாப்பாத்திரத்திற்கு சிறப்பான வரவேற்பும், நேர்மறையான விமர்சனங்களும் கிடைத்து வருவது சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது என்று ஆஷா சரத் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment