இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் அசனி புயல் ஒன்று உருவானது. இந்த அசனி புயலின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதன் விளைவாக தமிழகத்தில் இன்று முப்பத்தி மூன்று மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. அதுவும் குறிப்பாக இன்று காலை முதலே சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிதீவிரமாக மழை பெய்தது.
இதர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததாகவும் தகவல் கிடைத்தது. இந்த நிலையில் அசனி புயலானது தற்போது ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்வதாக தெரிகிறது. இதனால் அங்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அசனி புயல் காரணமாக ஆந்திராவுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம். அசனி புயல் ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இது காக்கி நாடா அல்லது விசாகப்பட்டினத்தில் மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் காலை அடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.