மிரட்ட வருகிறது ‘அசானி’ புயல்: அந்தமானில் சுற்றுலா தளங்கள் அதிரடி மூடல்!!

இந்த ஆண்டின் முதல் புயலான அசானி புயல் அந்தமான் நிக்கோபர் தீவில் நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் தென்கிழக்கு மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது.

இது வடக்கு நோக்கி நகர்ந்து அந்தமான் நிக்கோபர் தீவுகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது.நாளை அது புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டது.

இதனால் அந்தமான் தீவுகளில் கனமழையும் நிக்கோபார் தீவுகளில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமானில் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அந்தமானில் சுற்றுலா தளங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment