Connect with us

பிரச்சாரம் ஓய்ந்தவுடனே நட்சத்திரப் பேச்சாளர்கள் வார்டுகளை விட்டு வெளியேற வேண்டும்!

polii 1

தமிழகம்

பிரச்சாரம் ஓய்ந்தவுடனே நட்சத்திரப் பேச்சாளர்கள் வார்டுகளை விட்டு வெளியேற வேண்டும்!

பிரச்சாரம் ஓய்ந்தவுடனே நட்சத்திரப் பேச்சாளர்கள் வார்டுகளை விட்டு வெளியேற வேண்டும்!

நடக்க இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தமிழகமெங்கும் இன்று தேர்தல் களம் அதி தீவிரமாக சூடுபிடித்து காணப்படுகிறது. இன்று காலை முதலே வேட்பாளர்கள் வரிசைகட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறை  தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், கடம்பூர் பேரூராட்சி தவிர 489 பேரூராட்சிகளில் பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக 57 ஆயிரத்து 778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதன்படி பிரச்சாரம் நேரம் முடிந்த பின் வார்டுகளுக்கு சம்பந்தமில்லாதவர்கள் அந்த வார்டுகளை விட்டு வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிரச்சாரத்திற்காக வந்த நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வார்டுகளுக்கு சம்பந்தமில்லாத வெளியாட்கள் மாலையே வார்டுகளில் இருந்து உடனடியாக வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top