Connect with us

எதிர்பார்ப்பு எகிறியது போல் பட்ஜெட்டும் எகிறியது…. புலம்பும் பீஸ்ட் தயாரிப்பாளர்…!

பீஸ்ட்

பொழுதுபோக்கு

எதிர்பார்ப்பு எகிறியது போல் பட்ஜெட்டும் எகிறியது…. புலம்பும் பீஸ்ட் தயாரிப்பாளர்…!

எதிர்பார்ப்பு எகிறியது போல் பட்ஜெட்டும் எகிறியது…. புலம்பும் பீஸ்ட் தயாரிப்பாளர்…!

விஜய்னு சொன்னாலே விசில் சத்தம் காதை கிழிக்கும். அந்த அளவிற்கு விஜய்க்கு ரசிகர்கள் உள்ளனர். தமிழ் மொழியை தாண்டி பிற மொழியிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இவரது படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பிற மொழிகளில் விஜய் படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக தற்போது விஜய் நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். நிச்சயம் இப்படம் ஹிட்டாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. முன்னதாக நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.

படம் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கிடையில் அவ்வபோது வெளியாகும் படத்தின் அப்டேட்டுகளாலும் ரசிகர்கள் இப்படம் எப்போது வெளியாகும் என மிகவும் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பீஸ்ட் படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் இயக்குனர் நெல்சன் படத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்த பட்ஜெட்டையும் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையிலேயே எட்டி விட்டாராம். இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்குனர் நெல்சன் மீது பயங்கர அதிருப்தியில் உள்ளதாம்.

தற்போது படத்தின் பட்ஜெட் அவர்கள் எதிர்பார்த்ததை விட 20 கோடி ரூபாய் வரை அதிகமாக சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கிட்டத்தட்ட படம் முடியும் நிலையில் இருப்பதால் வேறு வழியின்றி அந்த தொகையை கொடுத்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் உள்ளது. இருப்பினும் இயக்குனர் மீது செம கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top