Connect with us

முன்புபோல பாலை பாக்கெட்டுகளுக்கு பதிலாக பாட்டிலில் ஏன் விற்கக்கூடாது?

milk

செய்திகள்

முன்புபோல பாலை பாக்கெட்டுகளுக்கு பதிலாக பாட்டிலில் ஏன் விற்கக்கூடாது?

முன்புபோல பாலை பாக்கெட்டுகளுக்கு பதிலாக பாட்டிலில் ஏன் விற்கக்கூடாது?

தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் அதிரடியாக கடைகளுக்கு ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைத்துக் கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் அத்தியாவசிய பொருளான பால் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் தான் விநியோகம் செய்ய படுகிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் பால் பொருட்களின் பாட்டிலில் ஏன் விற்கக்கூடாது என்று கேள்வி எழுப்பி உள்ளது. அதன் படி பால் பொருட்களுக்கு தான் பெருமளவிற்கு பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் பயன்படுத்தப்படுகிறது, இதனால் பாலை ஏன் முன்புபோல பாட்டிலில் விற்க கூடாது என்று கேள்வியைக் கேட்டனர்.

பால் பொருட்களை பாட்டிலில் விற்பனை செய்வது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை அளித்துள்ளது. அரசு நடத்தும் கடையில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் எப்படி தடையை அமல்படுத்த முடியும் என்றும் , பிற மாநிலங்களிலிருந்து வரும் நெகிழிப் பொருட்களை வருவதை தடுக்காத வரையில்  பெரிய பலன் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

அரசே நெகிழிப் பைகளில் ரேஷன் பொருட்களை வழங்கும் பொது மக்கள் எப்படி வாழ்வார்கள் என்றும் நீதிமன்றம் கேள்வி இருக்கிறது.

பிளாஸ்டிக் தடை உத்தரவை உறுதி செய்வதை எதிர்த்து வழக்கு விசாரணை ஜூன் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top