Connect with us

ஒருவழியாய் இருபது நாள் கழிச்சு ரிலீசானார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்!

ஆரியன் கான்

செய்திகள்

ஒருவழியாய் இருபது நாள் கழிச்சு ரிலீசானார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்!

ஒருவழியாய் இருபது நாள் கழிச்சு ரிலீசானார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்!

ஹிந்தி சினிமா மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் தனது கால் தடத்தை பதித்தவர் நடிகர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சில மாதங்களாகவே இவரின் பெயர் அதிகமாக பாதிக்கப்பட்டது.ஆரியன் கான்

ஏனென்றால் இவரது மகன் ஆர்யன் கான் போதை வழக்கின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார்.இதனால் தனது மகனை வெளியே கொண்டுவருவதற்காக நடிகர் ஷாருக்கான் பல்வேறு விதமான முறைகளில் தீவிரமாக முயற்சி செய்தார்.

ஆனால் தொடர்ந்து அவரின் ஜாமீன் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. இதனால் இந்த வழக்கு மும்பை ஹைகோர்ட் கொண்டு செல்லப்பட்டு ஹை கோர்ட் ஜாமீன் வழங்கியது.

சிறையில் அடைக்கப்பட்ட ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன்படி போதை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆரியன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை ஹைகோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கிய நிலையில் ஆர்தர் சாலை சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன். 20 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்த நிலையில் தற்போது விடுதலை செய்யப்பட்டார்.வெளியான அவரோடு அவருடைய இரண்டு நண்பர்களும் விடுதலை செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top