விருதுகளை குவிக்கும் ஆர்யா படம்… இந்த முறை சிறந்த நடிகர் விருதை தட்டி சென்ற ஆர்யா…..

கோலிவுட்டில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஆர்யா. சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த படத்திற்காக ஆர்யாவிற்கு பாராட்டுகளும் கிடைத்தது. ஆனால் அதனை தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளியான அரண்மனை 3 படம் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

ஆர்யா

இதனையடுத்து ஆர்யா தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆர்யா சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். ஆம் ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி படத்திற்காக தான் ஆர்யா சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

மௌனகுரு படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர் சாந்தகுமார் எழுதி இயக்கி, ஆர்யா நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் தான் மகாமுனி. ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் உருவான இப்படத்தில் நடிகர் ஆர்யா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். கதாநாயகியாகளாக நடிகைகள் இந்துஜா மற்றும் மகிமா நம்பியார் நடித்திருந்தனர்.

ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்த இப்படம் வெளியான நாள் முதல் தொடர்ந்து பல சர்வதேச விழாக்களில் பங்கேற்று விருதுகளை குவித்து வருகிறது. அந்த வகையில் முதலில் ஒன்பது சர்வதேச விருதுகளை குவித்தது. இதையடுத்து இஸ்ரேல் மற்றும் பூடானில் நடைபெற்ற சர்வதேச விழாவில் 3 விருதுகளை பெற்றது.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் அயோத்யா திரைப்பட விருது விழாவில் மகாமுனி படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் ஆர்யாவுக்கு சிறந்த நடிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்யாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment