Connect with us

அருப்புக்கோட்டை இரட்டை கொலை: 10 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை!!

murder

தமிழகம்

அருப்புக்கோட்டை இரட்டை கொலை: 10 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இருக்கும் பகுதியில் வசித்து வருபவர்கள் ஓய்வுபெற்ற ஆசிரியர்களான சவுந்தரபாண்டியன் மற்றும் அவரது மனைவி ஜோதிமணி.
இவர்களுக்கு சதீஷ்குமார் என்ற மகன் இருப்பதாக தெரிகிறது.

இவர் சென்னையில் ஐஐடியில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் ஓய்வுப்பெற்ற ஆசிரியர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி சவுந்தரபாண்டியன் மற்றும் அவரது மனைவி ஜோதிமணி ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இரத்த வெள்ளத்தில் இருவரும் பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர்.

இதனிடையே காலையில் வீடு திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு இருவரும் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சென்னையில் இருக்கும் அவரது மகனுக்கு தகவல் கொடுத்த நிலையில் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் 10 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top