தாய்மாமன் சீர்!.. அருண் விஜய் அமர்க்களப்படுத்திட்டாரு.. இத்தனை கோடிகள் கொட்டி நடந்ததா விஜயகுமார் பேத்தி திருமணம்?

நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமணம் மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அதை தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் மிக பிரம்மாண்டமாக நடந்த அந்த திருமணத்தின் செலைவை பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

மூத்த நடிகரான விஜயகுமாரின் முதல் மனைவி முத்துகண்ணு மற்றும் இரண்டாம் மனைவி நடிகை மங்சுளா. முதல் மனைவி முத்துகண்ணுக்கு முன்று பிள்ளைகள் அருண் விஜய், கவிதா மற்றும் அனிதா. இரண்டாம் மனைவியான மஞ்சுளாவுக்கும் முன்று மகள்கள் வனிதா, ப்ரீதா மற்றும் ஸ்ரீதேவி. இதில் அனிதாவிற்கு இரண்டு குழந்தைகள் தியா மற்றும் ஸ்ரீஜெய் கோகுல். அனிதாவின் முதல் மகள் தியாவிற்கு திருமணம் சென்ற 19ம் தேதி மகாபலிபுரத்தின் அருகிலுள்ள ஷெரடன் கிராண்ட் ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

விஜயகுமார் பேத்தி திருமணம்:

சென்ற ஒரு வாரமாக பந்தக்கால் நடுவது, மெஹந்தி ஃபங்ஷன், சங்கீத், நலங்கு போன்ற ஃபங்க்ஷன்களின் வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாகி வந்த நிலையில், நேற்று முன் தினம் தியாவின் திருமணம் ஒட்டு மொத்த குடுப்பத்தின் கொண்டாட்டத்துடன் நடந்து முடிந்தது. அனைத்து நிகழ்சிகளிலும் ஆட்டம் பாட்டம் என கலகலப்பாக நடந்தது.

விஜயகுமார் வீட்டு திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். மேலும் மீனா, பிரபு, பாக்கியராஜ், சினேகா, பிரசன்னா, ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி உள்ளிட்டோர் திருமண நிகழ்சியில் கலந்துக் கொண்டனர்.

இதை தொடர்ந்து வனிதா விஜயகுமாரும் தன்னை யாரும் திருமணத்திற்க்கு அழைக்கவில்லை. இருந்தாலும் சிங்கம் சிங்கிளாக இருந்தாலும் அது எவ்வளவு பவர் என்று எல்லாருக்கும் தெரியும் என பதிவிட்டு சிங்கம் தனியாக நடந்து செல்லும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

பயில்வான் ரங்கநாதன் பேச்சு:

இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், விஜயகுமார் மற்றும் முத்துகண்ணு இவர்களுக்கு முன்று பிள்ளைகள் அதில் அனிதா, கவிதா இருவரும் மருத்துவர்கள். அருண் விஜய் மட்டும் சினிமாவில் நடித்து வருகிறார். அருண் விஜயின் மாமனாரும் பெரிய மருத்துவர் அருண் விஜய்க்கு மார்கெட் இல்லாத சமயத்திலும் அவரின் மாமனார் அவரது படத்தை தயாரித்துள்ளார். மேலும் அருண் விஜய்க்கு ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளன, எனவே தாய்மாமன் முறையில் திருமணத்திற்கு சீரை அள்ளி கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தற்போது திருமணமான அவரது அக்கா மகளும் மாப்பிள்ளையும் டாக்டர்கள் தான்.

மேலும் மாமியார், மகள் மற்றும் மருமகன் என குடும்பமே ஒரு டாக்டர் குடும்பமாக உள்ளனர். ரிஸப்ஷனில் தியா காலில் மாப்பிள்ளை விழுந்தது மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 100 கோடிகளுக்கும் மேல் செலவழித்து இந்த திருமணத்தை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளனர் எனக் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...