கல்லூரியில் நடக்கும் அமானுஷ்யங்கள்- திகிலில் உறைய வைக்கும் அருள்நிதி நடிக்கும் டி ப்ளாக் பட டிரெய்லர் வெளியானது!
கலைஞரின் பேரனான அருள்நிதி முதல் படத்தில் இருந்தே வித்தியாசமான படங்களில் நடித்து வருபவர் ஆவார்.
இவர் இதுவரை நடித்த எல்லா படங்களும் வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்கள் தான். சாதாரண மசாலா டைப் கதையில் இதுவரை இவர் நடித்தது இல்லை.
இவர் நடிக்க வந்து 12 வருடங்கள் ஆகின்றன எல்லா படங்களிலும் இவர் தொடர்ந்து நடிப்பதில்லை. ஒரு சில படங்களில் மட்டுமே இவர் நடித்து வருகின்றார்.
மெளனகுரு, டிமான் டி காலனி , இரவுக்கு ஆயிரம் கண்கள் என இவர் நடித்த அனைத்து படங்களும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இந்த நிலையில் அருள்நிதி டி ப்ளாக் என்ற படத்தில் நடித்துள்ளார். காட்டை ஆக்ரமித்து கட்டியுள்ள கல்லூரியில் நடக்கும் அமானுஷ்யங்களே கதை.
இப்படத்தில் அருள்நிதி, அவந்திகா போன்றோர் நடித்துள்ளனர்.
விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கி இருக்கும் இப்படத்தின் டிரெய்லர் இதோ வெளியாகியுள்ளது.
