பக்தனுக்கு ஆருத்ரா தரிசனம் காட்ட இறைவன் புரிந்த லீலைகள்… திருவாதிரை களி உருவான சுவையான வரலாறு

கிருஷ்ணபராமாத்மா மாதங்களில் நான் மார்கழி என பகவத் கீதையில் சொல்கிறார். அதே போல நட்சத்திரங்களில் நான் திருவாதிரை என்கிறார்.

இது சிவனுக்கும் உகந்தது என்பது கூடுதல் சிறப்பு. இந்த நட்சத்திரத்தில் சிவன்கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இது திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி வழிபாடு. இதே நாளில் தான் மாணிக்கவாசகர் திருவெம்பாவைப் பாடலைப் பாடி முடித்து ஈசனைத் தரிசித்தார்.

Arudra Dharsan
Arudra Dharsan

ஈசனும் தேவலோகப் பசுவான காமதேனுவுக்கும் தரிசனம் தந்து அருள்புரிந்தார். இந்த நாளில் தான் ஈசனும், பார்வதிதேவியை மணக்க சம்மதித்தார். அதனால் தான் இன்றும் கன்னிப்பெண்கள் தனக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டி சிவபெருமானை வழிபட்டு வருகின்றனர்.

சுவையான வரலாறு

பாற்கடலில் பெருமாள் ஆதிசேஷனின் மீது பள்ளி கொண்டு இருந்த போது திடீரென இறைவனின் பாரம் அதிகமானது. அதை உணர்ந்த சேஷன் நாராயணா திடீரென தங்கள் உடல் பாரம் அதிகமாகி விட்டது. அதற்கு என்ன காரணம் என கேட்டார். ஈசனின் திருத்தாண்டவ அழகை நினைத்துப் பார்த்தேன். அந்தப் பூரிப்பின் காரணமாகவே உடலின் பாரம் அதிகரித்தது என்கிறார்.

இதைக் கேட்கும்போதே சந்தோஷமாக இருக்கிறதே…இந்த அழகை நேரில் காண வேண்டும் என்றும் அந்தப் பாக்கியம் வேண்டும் என்றும் இறைவனிடம் ஆதிசேஷன் கேட்கிறார். அதற்கு ஆதிசேஷனை பூலோகத்தில் தில்லையில் சென்று தவம் புரிய வேண்டும். அப்படி என்றால் இறைவனின் ஆருத்ரா தரிசனம் கிடைக்கும் என்கிறார்.

Aathisheshan
Aathisheshan

அதன்படி ஆதிசேஷன் பூலோகம் சென்று ரிஷி தம்பதியினருக்கு மகனாகப் பிறக்கிறார். உரிய பருவத்தில் தில்லையில் தவம் இருக்கத் தொடங்கினார். அவருடன் வியாக்ரபாதர் என்ற முனிவரும் தவம் புரிந்தார். இருவருக்கும் அருள்புரிய எண்ணிய ஈசன் திருவாதிரை நாளில் அவர்களுக்குத் தரிசனம் தந்து நடனமாடினார்.

மற்றொரு கதை

தாருகாவனத்து முனிவர்கள் சிவனை நினைத்து பெரிய யாகம் ஒன்றை நடத்தினர். சிவபெருமான் பிச்சாடனார் வேடம் பூண்டு முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்று பிச்சை எடுத்தார். முனிவரின் பத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனாராகிய சிவபெருமான் பின்னே செல்ல ஆரம்பித்தனர்.

இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மதயானை, முயலகன், மான், உடுக்கை, தீப்பிழம்பு ஆகியவற்றைத் தோற்றுவித்து சிவபெருமான் மீது ஏவினர். சிவபெருமான் மதயானையைக் கொன்று அதன் தோலை அணிந்தார்.

Sivan
Sivan

மற்றவைகளைத் தானேத் தரித்துக் கொண்டார். முயலகன் மீது வலதுகாலை ஊன்றி இடதுகாலைத் தூக்கி நடனமாடினார். முனிவர்களுக்கும் உண்மையை உணர்த்தினார். இதுவே ஆருத்ரா தரிசனம் என்றும் சொல்லப்படுகிறது.

மற்றொரு வரலாறு

சேந்தனார் ஒரு விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகில் உள்ள ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவபக்தருக்கு உணவு வழங்கிய பின் தான் சாப்பிடுவார். அன்று சரியான மழை. எங்கும் விறகுக் கிடைக்கவில்லை. உடனே அவர் கேழ்வரகுக் கழி செய்து சிவனடியரை எதிர்பார்த்து இருந்தார்.

யாரும் தென்படவில்லை. மனம் நொந்த பக்தனின் பக்தியை உலகுக்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான் சேந்தனார் இல்லத்திற்கு சிவனடியார் வேடத்தில் சென்றார்.

Sivanadiyar
Sivanadiyar

களியை சிவனடியார் விருப்பத்துடன் சென்றார். எஞ்சிய களியை அடுத்த வேளைக்கும் வேண்டும் என்று வாங்கிச் சென்றார். மறுநாள் அந்தணர்கள் சிதம்பரம் கோவில் கருவiறையத் திறந்தனர். எங்கும் களி சிதறல்கள் கிடந்தன.

ஆச்சரியமாக இருந்தது. உடனே அரசருக்கு அறிவித்தனர். அன்று இரவில் தான் கண்ட கனவை சொன்னார். கனவில் களி உண்ணப்போவதாக இறைவன் சொன்னார். அதனால் சேந்தனாரைத் தேடி அழைத்து வர அமைச்சருக்கு உத்தரவிட்டார்.

அவரோ சிதம்பரம் நடராஜருக்குத் தேர்த்திருவிழா நடந்தது. அங்கு சென்றார். அரசர் உள்பட அனைவரும் தேரை வடம்பிடித்து இழுத்தனர். மழை காரணமாக தேர் சிறிதும் அசையாமல் நின்றது.

அரசர் மிகவும் மனம் வருந்தினார். சேந்தனாரைப் பார்த்து நீ பல்லாண்டு பாடு என்றார். சேந்தனார் இறையருளால் 13 பாடல்களைப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது. சேந்தனாரின் காலில் அனைவரும் விழுந்து வணங்கினார். மன்னரும் தான் கண்ட கனவை சேந்தனாருக்கு சொன்னார்.

சேந்தனாரும் இறைவனே தனது வீட்டுக்கு வந்து களி உண்டார் என்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தார். அன்றைய தினமே திருவாதிரை நாள் என்றும் இன்றளவும் இறைவனுக்குக் களி பிரசாதமாகவும் படைக்கப்படுகிறது.

இந்த இனிய நாள் வரும் வெள்ளிக்கிழமை மார்கழி 22 (6.1.2023) அன்று வருகிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.