ஆருத்ரா தரிசனம் திருவிழா; ஜன 6ம் தேதி உள்ளூர் விடுமுறை!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ஜனவரி-6ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.

ஒவ்வோரு ஆண்டும் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்த உத்திரகோசமங்கை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா கோலாகலமாக நடைப்பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் அடுத்தாண்டு ஜனவரி 6-ம் தேதி திருவிழா கொண்டாட இருப்பதால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அன்றைய தினத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் திரு. ஜானி டாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

அன்றைய தினத்தில் பள்ளி, கல்லூரிகள் செயல்படாது எனவும், இதனை ஈடுக்கட்டும் வகையில் 21.01.2023 அன்று சனிக்கிழமை வேலைநாளாக செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் உள்ளூர் விடுமுறை நாளில் அலுவலகங்கள், சார்நிலை அலுவலகங்கள் மற்றும் முக்கிய தேர்வுகள் நடைபெறும் பட்சத்தில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.