பிரமாண்டமாக உருவாகியுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம்..என்னென்ன வசதிகள் உள்ளன?

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. புத்தகங்கள் எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதியில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் உலக தரத்தில் கட்டப்பட்டுள்ளது.கட்டிடத்திற்கு 99 கோடி ரூபாய் புத்தகங்கள் வாங்க 10 கோடி ரூபாய், தொழில் நுட்ப உபகரணங்கள் அமைக்க 5 கோடி ரூபாய் என 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 லட்சத்து 13,28 சதுர அடிகள் ஆறு தளங்கள் கொண்ட கட்டிடமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் உருவாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி இதன் கட்டுமான பணியை தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் கட்டுமான பணிகளை முடிந்து வருகிறது. கீழ்தளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் முன் பகுதியில் வாசகர்களை வரவேற்கும் வகையில் கலைஞரின் உருவச்சிலை அமைக்கப்படுகிறது.

முதல் தளத்தில் குழந்தைகள் நூலகம், வாசகர்கள் தினசரி வார, மாத பத்திரிகைகளை வாசிப்பதற்கான வசதிகளும், இரண்டாவது தளத்தில் கலைஞரின் நினைவை போற்றும் வகையில் அவரது கவிதைகள், கட்டுரைகள், அரசியல், இலக்கியம், வரலாற்று நூல்கள், திரைப்படத்துறை தொடர்பான புத்தகங்கள் தனி பிரிவாக இடம் பெற்றுள்ளன.

அத்துடன் கலைஞர் ஆய்வகம் என்ற பெயரிலான அரங்கில் அவரது 4000 ஆய்வு அறிக்கை நூல்கள் இடம் பெறுகின்றன. போட்டி தேர்வுகளுக்கு படிப்பவர்களை கருத்தில் கொண்டு அவர்களுக்காக 30 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்படும்.

மூன்றாவது தளத்தில் 63,000 புத்தகங்களுடன் தமிழ் இலக்கியப் பகுதி மற்றும் நான்காவது தளம் ஆங்கில நூல்கள் பகுதியாகவும், ஐந்தாவது தளத்தில் ஐம்பெரும் காப்பியங்கள், பதினெண் கீழ்க்கணக்கு உள்ளிட்ட சங்க இலக்கிய சிறப்பு பகுதியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆறாவது தளத்தில் திறந்த வெளி படிப்பகம், உணவகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும். நூலகத்தின் மேல் மாடியில் தோட்டத்துடன் நூல்களை படிப்பதற்கான வசதியும் கலைக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளன.

நூலகத்தின் கட்டுமான பணிகள் கடந்த செப்டம்பர் மாதமே 100% முடிந்துள்ளது. தொடர்ந்து மின் விளக்குகள் குளிர்சாதன வசதிகள் 6 மாடிகளுக்கும் செல்வதற்கான நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

முத்தமிழ் அறிஞரின் நூற்றாண்டு விழா.. காலங்களைக் கடந்த கலைஞர்-100

கட்டிடத்தின் நடுப்பகுதியில் சூரிய வெளிச்சம் கிடைக்கும் வகையில் கண்ணாடி வேலைகளான கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. ஊழலங்காரம் மற்றும் வெளிப்புற அலங்கார பணிகளும் முடிந்து ஜெர்மன் கண்ணாடி சுவர் பூச்சி பூசப்பட்டுள்ளது. அதில் கலைஞரின் உருவம் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றனர்.

10 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டரை லட்சம் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. நூலகம் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இம்மாத இறுதியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews