குற்றாலத்தில் செயற்கை நீர்வீழ்ச்சிகளா? – ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

நெல்லை மாவட்டம் அம்பாமுத்திரத்திரத்தை சேர்ந்த வினோத் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்.

அதில் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் குற்றால அருவி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து உருவாகிறது என்றும் சீசன் காலங்களில் கூட்டம் அதிமாக வருவதால் குற்றாலம் அருவிகளில் இயற்கையின் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையை மாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!!

அதே போல் செயற்கையாக அருவிகளை உருவாக்கி சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதால், செயற்கையான நீர்வீழ்ச்சி உருவாக்கி செயல்படும் தனியார் சொகுசு விடுதிகளை மூடவேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கானது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி மகாதேவன் மற்றும் சத்தியநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செயற்கை நீர்வீழ்ச்சிகள் இன் புகைப்படம் மற்றும் முகவரிகளை சமர்ப்பித்தார்.

கனமழை! பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1,000 – அரசாணை வெளியீடு!

அப்போது பேசிய நீதிபதிகள் இயற்கை அருவிகளை மாற்றி செயற்கை அருவிகள் உருவாக்குவது முற்றிலும் தவறானது என கூறினார். அதே போல் குமரி, கோவை போன்ற மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு உருவாக்க வேண்டும் என்றும் இந்த குழு செயற்கை நீர்வீழ்ச்சிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.