காதல் பறவையாக டூயட் பாடிய முன்னணி நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து முடிந்தது.சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. திருமண நிகழ்வை ஒளிபரப்பும் உரிமத்தை மட்டும் பிரபல ஓ.டி.டி நிறுவனம் ஒன்று 25 கோடிக்கு வாங்கியுள்ளது.
நயன்தாரா தன் திருமணத்தில் மரகதத்தால் ஆன சோக்கர் மற்றும் போல்கி கற்கள் பதிக்கப்பட்ட ரஷ்யன் பேட்டர்ன் நெக்லஸ் அணிந்திருந்தார். இத்துடன் ஏழு அடுக்குகள் கொண்ட ஆரம் அணிந்திருந்தார். இந்த ஆரம் வைரம் மற்றும் ரோஸ் கட்ஸ், போல்கி, மரகத கற்களால் ஆனது. மேலும் Cabochon என்ற கல் வகையைச் சுற்றி மரகத கற்கள், வைர கற்களால் ஆன காதணியை அணிந்திருந்தார் என்பது நமக்கு தெரிந்ததே.’
நயன் அணிந்திருந்த வளையலும் மரகதத்தால் ஆனது. இந்த நகைகள் இந்திய மதிப்பின் படி பல கோடிகளைத் தாண்டும்.நயன்தாரா தன்னுடைய திருமணத்தில் கைகளால் எம்பிராய்டரி டிசைன் செய்யப்பட்ட அடர் சிகப்பு நிற புடவையை அணிந்திருந்தார்.இதுதவிர நயன்தாராவுக்கு சுமார் 5 கோடி மதிப்பிலான வைர மோதிரத்தை பரிசாக அளித்துள்ளாராம் விக்னேஷ் சிவன்.
இந்நிலையில் சின்னத்திரை ஆர்த்தி மற்றும் கணேஷ் தம்பதியினர்,நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை கான்செப்ட்டாக வைத்து நடனமாடியுள்ளனர்.விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் பிக்பாஸ் சீசன்களில் பங்கேற்ற பல பிரபலங்கள் இணைந்து நடனமாடி வருகின்றனர்.
இந்த வார எபிசோடு ‘ஆஹா கல்யாணம்’ என்னும் கான்செப்ட்டில் அனைவரும் திருமணம் நடக்கும் விதமாக காஸ்டியூம் அணிந்து நடனமாடி வருகின்றனர். திருமணத்தன்று நயன்தாரா அணிந்திருந்த உடையை போலவே ஆர்த்தியும் சிவப்பு நிற உடையை அணிந்து அந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் ஆர்த்தியின் பதிவை பகிர்ந்து ‘ப்யூட்டிபுல்’ என கமெண்ட் அடித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் விக்னேஷ் சிவனை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .