சென்னையில் பொங்கல் கொண்டாட்டம்: நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் மூன்று நாட்களுக்கு கலை நிகழ்ச்சிகள்!

தமிழர்களுக்கு உரித்தான பண்டிகையாக காணப்படுவது பொங்கல் பண்டிகை ஆகும். இந்த பொங்கல் பண்டிகை தை மாதம் 1ஆம் தேதியில் நடைபெறும். அதன்படி ஒன்றாம் தேதி பொங்கல் பண்டிகை, இரண்டாம் தேதி மாட்டு பொங்கல் பண்டிகை, 3ஆம் தேதி காணும் பொங்கல் பண்டிகை என அடுத்தடுத்து வரிசையாக மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும்.

இவை கிராமங்கள் தொடங்கி பெருநகரங்கள் வரைக்கும் மக்கள் அனைவரும் பொங்கல் வைத்து குளித்து புத்தாடை அணிந்து மகிழ்வர். இந்த நிலையில் சென்னையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நம்ம ஊர் திருவிழா நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சென்னையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் “நம்ம ஊரு திருவிழா” என்ற பெயரில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment