அர்ச்சனாவை கடுமையாக விமர்சிக்கும் நெட்டீசன்கள்…. ஆரியை சீண்டினா சும்மாவா?

4167efc9aa70f48c79ee9cb6a12a6719-2

ஆரிக்கு எதிராக பேசியவர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றப்பட்டனர். ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக அர்ச்சனாவுக்கு ரொம்பவே அதிகமாக நெகட்டிவிட்டி கிடைத்தது. 

டிவிட்டரில் ரசிகர்கள் அவரை கிழித்த கிழியில் அவர் டிவிட்டரை விட்டே ஓட்டம் பிடித்தார். பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி கொடுத்த போதும் தனது தவறை உணராமல் விரோத போக்கிலேயே நடந்து கொண்டார். 

இதனால் இன்னும் அதிகமாக விமர்சிக்கப்பட்டார். பிக்பாஸ் சீசன் 4ஐ கெடுத்ததே அர்ச்சனாதான் என விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில் நடிகை ரேகா பிக்பாஸ் ஃபினாலேவில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். அதில் நிஷா, அர்ச்சனா, சோம சேகர் ஆகியோருடன் உள்ளார் ரேகா. இதனை பார்த்த ரசிகர்கள், அர்ச்சனா முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை என கூறி வருகின்றனர். இன்னும் சிலர் லாஸ்லியா பின்னால் நிற்கிறார் என கூறி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.