Connect with us

தங்கக் கடத்தல் விவகாரம்: திருவாரூரில் இரண்டு பேர் கைது!!

202112131543529179 Tamil News Tamil News Vembakottai near alcohol sales arrest SECVPF

தமிழகம்

தங்கக் கடத்தல் விவகாரம்: திருவாரூரில் இரண்டு பேர் கைது!!

திருவாரூரை சேர்ந்த ஹாஜி என்பவர் சென்னையில் செல்போன் கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவர் அவுரங்கசீப் என்பவருடம் சேர்ந்து மும்பையில் இருந்து தங்கத்தை கடத்தியதாக கூறப்படுகிறது.

இதற்காக சங்கர் என்பவரை தங்கத்தை விழுங்க செய்து அதனை மலத்தின் மூலம் வெளியேற்றும் யுத்தியை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. விமானம் மூலம் சென்னை வந்துள்ள சங்கர் 16 லட்சம் மதிப்புள்ள இரண்டு தங்கக்கட்டிகளுக்கு பதில் ஒரு தங்ககட்டியை மட்டும் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஹாஜி மற்றும் அவுரங்கசீப் ஆகியோர் சங்கரை அழைத்து சென்று கொடூரமாக தாங்கியுள்ளனர். அதோடு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவரது வயிற்றை ஸ்கேன் செய்தபோது தங்க கட்டி இல்லாததை கொண்டு மேலும் துன்புறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் மருத்துவர் ஒருவரின் உதவியின் மூலம் இந்த தகவலை அறிந்து சங்கரின் மனைவி மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தமிழகத்திற்கு வந்த அஜய் மற்றும் அவுரங்கசீப் கைது செய்தனர்.

மேலும், இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள ஹாஜி மற்றும் அவரது நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top